சென்னை, டிச.16:
சென்னை பாடியில் போத்தீஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது. இதையொட்டி ஜவுளி, நகைகளுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பாடியில் பாரம்பரியம், நம்பிக்கை மற்றும் தரத்தின் அடையாளமான போத்தீஸ் மற்றும் போத்தீஸ் ஸ்வர்ண மகால் 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. போத்தீஸ் நிறுவனத்தின் இந்தியாவின் மிகப்பெரிய ஷோரூமான இதன் திறப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.
இந்த புதிய கிளையை ஐ.சி.எப். பொதுமேலாளர் சுப்பாராவ், அவருடைய மனைவியும், ஐ.சி.எப். பெண்கள் அமைப்பின் தலைவியுமான லலிதா தேவி ஆகியோர் திறந்து வைத்தனர். அப்போது போத்தீஸ் குழுமங்களின் நிர்வாக இயக்குனர் ரமேஷ் போத்தீ, போத்தீஸ் ஸ்வர்ண மகால் திருச்சி கிளை நிர்வாக இயக்குனர் அஸ்வந்த் போத்தீ, ஸ்வர்ண மகால் நிர்வாக இயக்குனர் அசோக் போத்தீ ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்த மகத்தான திறப்பு விழா, போத்தீஸின் 25 ஆண்டுகால வெள்ளி விழா கொண்டாட்டத்தின் ஒரு
பகுதியாகும். 4-ம் தலைமுறை நிர்வாகத்தின் புதிய உற்சாகம், நவீன அணுகுமுறை மற்றும் வாடிக்கையாளர் சேவையில் முழுமையான அர்ப்பணிப்புடன் போத்தீஸ் தனது சேவை மரபை மேலும் உயர்த்தி தொடர்கிறது.
திறப்பு விழா சலுகையாக வருகிற 21–-ந்தேதி வரை வாங்கும் அனைத்து ஜவுளி ரகங்களுக்கும் 10 சதவீதமும், 31-ந்தேதி வரை வாங்கும் தங்க நகைகளுக்கு பவுனுக்கு ரூ.2 ஆயிரம், வைர நகைகளுக்கு ஒரு கேரட்டுக்கு ரூ.10 ஆயிரமும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
போத்தீஸ் பாடி ஷோரூம் துணிகள், நகைகள், வீட்டு உபயோக பொருட்கள், லைப்ஸ்டைல் பொருட்கள் மற்றும் மளிகை தேவைகள் என அனைத்தையும் ஒரே இடத்தில் வழங்கும் முழுமையான ஷாப்பிங் மையமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
தரை தளத்தில் தங்கம், வைரம், வெள்ளி மற்றும் ஆன்டிக் நகைகள், முதல் தளத்தில் பட்டு மற்றும் டிசைன் புடவைகள், 2-ம் தளத்தில் பெண்களுக்கான ரெடிமேட் ஆடைகள், சுடிதார் மெட்டீரியல், பேஷன் ஆக்சஸரீஸ் மற்றும் ஹேண்ட்பேக்ஸ், 3-ம் தளத்தில் குழந்தைகளுக்கான ரெடிமேட் ஆடைகள், பொம்மைகள், புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கான பொருட்கள் மற்றும் ஸ்டேஷனரி,
4-ம் தளத்தில் ஆண்கள் ரெடிமேட் – பிராண்டட் ஆடைகள், வேட்டி, சூட்டிங் – ஷர்டிங் துணிகள், டவல், பெட்ஷீட் மற்றும் ஃபர்னிஷிங் பொருட்கள், 5-ம் தளத்தில் லைப்ஸ்டைல் பொருட்கள், ஸ்டேஷனரி, காலணி, ஆக்சஸரீஸ், கடிகாரங்கள், ட்ராலி பைகள் மற்றும் மொபைல் போன்கள், 6-ம் தளத்தில் சூப்பர் மார்க்கெட், மளிகை பொருட்கள், காய்கறிகள், பழங்கள், பேக்கரி, பிளாஸ்டிக் – ஸ்டீல் பொருட்கள், வீட்டு சுத்தம் செய்யும் பொருட்கள்,
7-ம் தளத்தில் லிவிங் ரூம், டைனிங், ஆபிஸ் மற்றும் படுக்கையறை மரச்சாமான்கள், டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏர் கண்டிஷனர் மற்றும் சமையலறை சிறிய மின்சாதனங்கள், பர்னிச்சர்கள், வீட்டு உபயோக பொருட்கள் கிடைக்கும்.
உலகத் தரமான கட்டமைப்பு, பரந்த தயாரிப்பு வரம்பு மற்றும் அபார வசதிகளுடன், போத்தீஸ் பாடி ஷோரூம் புதிய ஷாப்பிங் அனுபவத்தை உருவாக்குகிறது.
![]()





