சென்னை, டிச. 5–
தமிழ்நாடு பாஜகவில் இருக்கும் சினிமா கலாச்சாரம் கட்சியை சீர்குலைத்துவிட்டது என்று, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி கடுமையான விமர்சனங்களை வைத்து உள்ளார்.
பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி, கடந்த சில மாதங்களாக பாஜகவை நேரடியாக விமர்சனம் செய்து வருகிறார். பாஜகவில் இருந்தாலும் கூட, மூத்த தலைவரான இவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படாத நிலையில், கட்சி மீது கடுமையான விமர்சனங்களை வைத்து வருகிறார். பிரதமர் மோடியை டுவிட்டரில் வெளிப்படையாக சுப்பிரமணிய சாமி சில இடங்களில் விமர்சனம் செய்து இருக்கிறார். சொந்த கட்சியின் பல்வேறு முடிவுகளை விமர்சனம் செய்துள்ளார்.பாஜக பதுங்கும் பூனை
இந்த நிலையில்தான் தமிழ்நாடு பாஜக கட்சியை சுப்பிரமணியன் சாமி விமர்சனம் செய்துள்ளார். அதில், தமிழ்நாட்டில் ஆளும் திமுகவிற்கு நான் மட்டுமே எதிர்க்கட்சியாக செயல்பட்டுக்கொண்டு இருக்கிறேன். தமிழ்நாடு பாஜகவில் எல்லோரும் பதுங்கும் பூனைகளாக இருக்கிறார்கள். அவர்கள் ஸ்டாலின் உறுமினால் பயந்து பதுங்கும் பூனையாக தமிழ்நாடு பாஜக இருக்கிறது. தமிழ்நாடு பாஜகவில் இருக்கும் ‘சினிமா கலாச்சாரம்’, கட்சியை சீர்குலைத்துவிட்டது என்று சுப்பிரமணியன் சாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.