சிறுகதை

பாசாங்கு-ராஜா செல்லமுத்து


கண்ணன் தன் அலுவலகத்தில் இருந்து வருவதற்கு எப்படியும் ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகும் என்று நண்பன் பிரகாசிடம் சொன்னான்.

அப்படியா ஒரு மணி நேரம் ஆகுமா? என்று பிரகாஷ் செல்போனிலேயே வாய் பிளந்து பேசினான்.

பிரகாஷ் 2 பஸ் பிடித்து ஆபீஸிலிருந்து நீ இருக்கிற இடத்துக்கு வருவதற்கு ஒரு மணி நேரம் கண்டிப்பா ஆகும்.

அதனால நீ வெயிட் பண்ணு நான் வரேன் என்றான் கண்ணன் .

சரி என்று சலிப்பாக சொல்லிவிட்டு போனை கட் செய்தான் பிரகாஷ்.

கண்ணனிடம் பேசி முடிப்பதற்குள் அதற்குள் மேலாளர் ஒருவேலை அவனுக்கு கொடுத்துவிட்டார்.

எப்படியும் இந்த வேலையை முடித்து போவதற்கு பிரகாஷிடம் சொன்ன கால அவகாசத்தை தாண்டி விடும் என்பது கண்ணனுக்கு தெள்ளத் தெளிவாக தெரியும்.

எதுவும் தவறாக நினைப்பானோ என்று தெரிந்து கொண்ட கண்ணன் மேலாளர் கொடுத்த வேலையை அவசர அவசரமாக செய்து முடித்து விட்டு ஓடினான்.

பேருந்துகளில் அத்தனையும் கூட்டத்தால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. வேறுவழியின்றி படி வரை தொங்கிய படி வரை பிதுங்கிய ஒரு பேருந்தில் ஏறி வழியும் வியர்வையை ஒருவழியாக துடைத்து தான் இறங்க வேண்டிய இடத்திற்கு ஒரு பயணச்சீட்டை வாங்கினான்.

நிறுத்தங்களில் ஆசுவாசப்படுத்தி தன்னுடைய செல்போனை எடுத்து பிரகாசுக்கு தகவல் சொன்னான்.

இன்னும் அரை மணி நேரம்; இன்னும் இருபது நிமிடம் என்று வரும் நேரத்தை பட்டியலிட்டு கொண்டிருந்தான் .

என்ன கண்ணா… நீ சொல்லி ஒரு மணி நேரத்துக்கு மேல ஆச்சு. இன்னும் வரக் காணோமே? என்று பிரகாஷ் சொல்ல

வேற வழி இல்ல பிரகாஷ் வரும்போது ஒரு வேலையைச் செய்தான் என்று சமாளித்தான்.

எப்படியும் பிரகாஷ் நிற்கும் இடத்திற்கு கண்ணன் வந்து சேருவதற்கு இன்னும் ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகலாம் என்று கண்ணனுக்கு தெரியும். சொன்னால் திட்டுவான் என்று தெரிந்து கொண்டு பேசாமல் இருந்தான்.

குறிப்பிட்ட நேரத்திற்குள் தான் குறித்த இடத்தில் நின்று கொண்டிருந்த பிரகாஷ் எப்படியும் கண்ணன் பேசிய நேரத்திற்கு வர சாத்தியம் இல்லை என்பதை தெரிந்து கொண்டு அருகில் இருக்கும் மொபைல் ஷாப்புக்கு சென்றான்.

குளுகுளு ஏசி போடப்பட்ட அந்த மொபைல் ஷோரூமில் புதிய போன் விலை, மாடல் என்று அத்தனையும் ஒரு விற்பனைப் பெண்மணியிடம் விசாரித்துக் கொண்டிருந்தான்

சரி செல்போன் பார்க்கலாம் என்று உள்ளே நுழைந்தான். உள்ளே நுழைந்து பத்து பதினைந்து செல்போன் விலைப்பட்டியல் அதனுடைய பயன்பாடு என்று அத்தனையும் குறித்து கேட்டுக்கொண்டிருந்தான்.

ஒருவழியாக சந்தடி குறைந்து போக்குவரத்து சேவைகளும் விலக்கி, பிரகாஷ் கண்ணனும் சந்திக்க ஏற்பாடு செய்திருந்த இடத்திற்கு வந்தான் கண்ணன்.

இறங்கியதும் இறங்குமுகமாக பிரகாசுக்கு போன் செய்தான்.

எங்க இருக்க? என்று கேட்டபோது அப்படியே உனக்கு கட்டில் இருக்குற மொபைல் ஷாப்புக்கு வா என்றான் பிரகாஷ் .

இந்த கேப்பில் மொபைல் எடுக்க ஆரம்பிச்சுட்டாரு போல என்று நினைத்த கண்ணன் அதுவரையில் ஊற்றிக் கொண்டிருந்த வெயில் வெப்பத்திலிருந்து அருகில் இருக்கும் மொபைல் ஷாப் நுழைந்தான்.

இதமாக மிதமாக குளிரூட்டப்பட்ட அந்த மொபைல் ஷோரூம் குளிர்ச்சியா குளிர்ந்து கொண்டிருந்தது.

லாவகமாக ஒரு சேரில் அமர்ந்துகொண்டு 5, 6 மொபைல் போன்களை பரப்பி வைத்து ஒவ்வொரு மொபைல் போனுக்கும் விலை அதன் பயன்பாடு என்று அத்தனையும் கேட்டுக்கொண்டிருந்தான் பிரகாஷ்.

அப்போது உள்ளே நுழைந்த கண்ணன், பிரகாஷின் தோளைத் தொட்டு அருகிலிருக்கும் சீட்டில் அமர்ந்தான்.

கண்ணன் வந்தது கூட அவனிடம் பேசாத பிரகாஷ் மொபைல் பார்ப்பதிலும் அதனுடைய பயன்பாடு கேட்பதில் மும்முரமாக இருந்தான் .

இவர் புது போன் வாங்கப் போகிறார் போல ? என்று ஆவலாக இருந்தான்.

எப்படியும் கண்ணன் வந்து அரை மணி நேரத்திற்கும் மேல் ஆனது மொபைல் வாங்க முடிவாகவில்லை .

கடைசியில் அடுத்த வாரம் வாங்கிக்கிறேன் என்று ஒற்றை வரியில் சொல்லி விட்டு அந்தக் கடையை விட்டு வெளியே வந்தான் பிரகாஷ்

அந்த விற்பனை பெண்மணிக்கு முகம் சுருங்கி போனது .

இருவரும் வெளியே வந்தார்கள்.

என்ன பிரகாஷ் மொபைல் வாங்கலையா? என்று கேட்டபோது

நீ பாட்டுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி வரேன்னு சொன்ன இந்த வெயில் இந்த புழுக்கத்தில் நிக்க முடியல .ரொம்ப வேர்த்து ஊத்துது. பக்கத்துல பார்த்தேன் ஒரு மொபைல் ஷோரூம் ஒரு மொபைல் எடுக்கிறது மாதிரி உள்ளே போய், மொபைல் எடுக்கிற மாதிரி அந்த பொண்ணு கிட்ட பேசிட்டு இருந்தேன்.

பிரகாஷ் அப்போ உண்மையிலேயே நீ அங்க மொபைல் வாங்க போகலையா? என்று கண்ணன் கேட்டபோது

அட நீ ஒண்ணு கையில பத்து காசு இல்ல.. நீ வர வரைக்கும் ஏசியில் உட்கார்ந்தது மாதிரி இருக்கும். உனக்காக வெயிட் பண்ணுன மாதிரி இருக்கும் அப்படின்னு தான் மொபைல் ஷோரூம் போனேன். அங்கு போய் மொபைல் வாங்குவது மாதிரி அப்படி ஒரு நடிப்பு நடிச்சேன். மத்தபடி எல்லாம் நமக்கு மொபைல் வாங்க இல்ல

என்று பிரகாஷ் சொன்னபோது விக்கித்து நின்றான் கண்ணன்

Leave a Reply

Your email address will not be published.