சிறுகதை

பாசப் பள்ளம் | செருவை.நாகராசன்

Spread the love

அவன் வீட்டுக்கு நான் வரலே வசந்தி! ரெண்டு தடவை அவன் என்னை காயப்படுத்திட்டான்.

ஒரு தடவை வேற ஏரியாவுக்கு வீட்டை மாத்தும்போது மூணு வேளையும் ஓட்டல் சாப்பாடு. நானும் கூட இருந்தது தொந்தரவா இருந்துச்சோ என்னவோ ? நீங்க ஊருக்குப் போய்ட்டு அப்புறமா வாங்கப்பா ன்னான்.

அடுத்து ஒரு தடவை போனப்ப! என்னப்பா நான் தங்குற ரூம்ல அட்டைப் பெட்டி, வேஸ்ட் சாமானெல்லாம் நெறையக் கெடக்குன்னான். அதுக்கு உடனே அவன் உங்களை யாரு வரச்சொன்னான்னான்? இனிமே அவன் எப்படிக் கெஞ்சிக் கூப்பிட்டாலும் நான் போக மாட்டேன் வசந்தி என்றார் வாசவன் உறுதியான குரலில்.

எனக்கும் இனிமே போக வேண்டாம்னு தாங்க தோனுது.

கதவை சாத்திக்கிட்டு பேரனுக்கு மருமக ரெண்டு மணி நேரம் ட்யுசன் எடுப்பா. அப்ப சின்னவனை நாம பார்த்துக்கனும்.

தெனம் காலையிலே மூத்தவனை ஸ்கூல்ல விட்டுட்டு வந்த பிறகு பத்து மணியைப் போலத்தான் பேம்பர்ஸைக் கழட்டுவா. அதுவரைக்கும் நாம தூக்கி வச்சக்கனும். வயத்துல ஒழுகும்கெட்ட ஸ்மெல் வரும். தாங்காது. சனி, ஞாயிறுன்னு ஸ்பெசல் அயிட்டம் சமைக்கிறேன்னு போயிடுவாநாம ரெண்டு பேரன்களோடயும் நாள் பூரா அல்லாடனும். இதெல்லாம் அனுபவிக்கனும்னு நமக்கு என்னங்க தலைவிதியா?

இனிமே நானும் போறதா இல்லங்க என்றாள் வசந்தியும் உறுதியான குரலில்.

அடுத்த வாரம் தனது குடும்பத்துடன் காரில் ஆனந்த் வந்திருந்தான். வாசவனும் வசந்தியும் பேரன்களைக் கொஞ்சினர். கொண்டாடி மகிழ்ந்தனர்.

அடுத்த வாரம் நான் மட்டும் ஆஸ்திரேலியா போறேம்பா. ஒரு புராஜெக்ட். அனன்யா புள்ளைங்களோட மைசூர்லதான் இருப்பா. நீங்களும் அம்மாவும் தொணைக்கு மூணு மாசம் வந்து உங்க மருமக கூட இருக்கனும்பான். அம்மா நீயும் தான் என்பான்.

ஏம்பா நீ இப்படிக் கேட்கலாமா? உனக்கு ஒரு பிரச்னைன்னா நாங்க ஒதுங்கி இருந்துடுவமா, என்ன..? இப்ப நீங்க திரும்பி போகும்போதே கார்ல உங்க கூட நாங்களும் வர்றோம்பா என்று கனிவுடன் வாசவன் சொல்ல வசந்தியும் புன்னகையுடன் தலையாட்டினாள்.

மீண்டும் பாச உள்ளங்கள் பாசப் பள்ளம் நோக்கிப் பாய்ந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *