செய்திகள்

பாக்கம் மகாகவி பாரதியார் பள்ளியில் 20 –வது ஆண்டு கண்காட்சி: திருவள்ளூர் கலெக்டர் மகேஸ்வரி துவக்கினார்

திருவள்ளூர், ஆக. 14–

திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம், பாக்கம் ஊராட்சியில் உள்ள சேவாலயா மகாகவி பாரதியார் மேல்நிலைப்பள்ளியில் 20–வது ஆண்டு கண்காட்சியை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் திறந்து வைத்து பார்வையிட்டு, மாணவர்களிடம் கலந்துரையாடினார்.

சேவாலயா மகாகவி பாரதியார் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டுதோறும் நடைபெறும் கண்காட்சியில் ஒவ்வொரு கருப்பொருளைக்கொண்டு, செயல் விளக்கம் காண்பிக்கப்படும். அதன்படி, 20–வது ஆண்டு கண்காட்சி ‘டுவர்ட்ஸ் சஸ்டெயின்யேபில் பியூச்சர்’ என்ற தலைப்பில் நடைபெற்றது. இக் கண்காட்சியினை கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் துவக்கி வைத்து அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளின் மாணவர்கள் செயல் விளக்கத்தை பார்வையிட்டு, மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

பின்னர் விழா அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களிடையே கலந்துரையாடிய கலெக்டர் மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர் மற்றும் முதியோர்களை மதித்து நடக்க வேண்டும் எனவும் அவ்வாறு நடக்கும் பட்சத்தில் தங்களது வாழ்வில் அன்பு, வளம் மற்றும் மேன்மை நிலை ஆகியவை உங்களை வந்தடையும் எனவும் மாணவர்கள் ஒவ்வொருவரும் குறைந்தது, 5 மரக்கன்றுகளை நடவு செய்து பராமரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மாணவர்கள் கைகளால் வடிவமைத்த விடியல் என்ற புத்தகத்தை வெளியிட்டு, 5 மாணவர்களின் உயர்கல்விக்காக ரூ. 1 லட்சத்து 72 ஆயிரம் மதிப்பிலான காசோலைகளை மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் வட்டாட்சியர் சீனிவாசன், ஆவடி வட்டாட்சியர் சரவணன், சேவாலயா நிறுவனர் முரளிதரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *