இஸ்லாமாபாத், ஜன. 31–
பாகிஸ்தானில் பெஷாவர் நகரில் உள்ள மசூதியில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் பலி எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது.
பாகிஸ்தானில் பெஷாவர் நகரில் உள்ள மசூதியில் நேற்று பிற்பகலில் தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த தொழுகையில் சுமார் 260 பேர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. அப்போது பயங்கரவாதி ஒருவர் தற்கொலைப்படை தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.
பலி 90 ஆக உயர்வு
இந்த தாக்குதல் அங்கு பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில், தொடக்கத்தில் இந்த தாக்குதலில் பலியானார் எண்ணிக்கை 32 ஆக இருந்த நிலையில் தற்போது 90 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மசூதியில் நடைபெற்ற இந்த தற்கொலைப்படை தாக்குதல் பாகிஸ்தான் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.