செய்திகள் போஸ்டர் செய்தி

கராச்சி பங்குச்சந்தை கட்டிடத்தில் இன்று தீவிரவாதிகள் அதிரடி தாக்குதல்

கராச்சி பங்குச்சந்தை கட்டிடத்தில் இன்று தீவிரவாதிகள் அதிரடி தாக்குதல்:

போலீஸ் திருப்பி சுட்டதில் 4 பேர் பலி

இறந்ததில் 3 பேர் தீவிரவாதிகள்

இஸ்லாமாபாத், ஜூன் 29-

பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள பங்குச்சந்தை அலுவலகத்தில் இன்று நடந்த தாக்குதலில், 3 தீவிரவாதிகள் உள்பட 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர்.

பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள பங்குச்சந்தை அலுவலகத்தின் பிரதான நுழைவு வாயிலில் கையெறி குண்டை வீசிவிட்டு, தீவிரவாதிகள் கட்டடத்துக்குள் நுழைந்துள்ளார். அப்போது, காவல் துறையினர் நடத்திய பதில் தாக்குதலில், துப்பாக்கி ஏந்திய 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக காவல்துறை கூறியதாக, ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆனால், மொத்தம் எத்தனை, துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் கட்டிடத்துக்குள் நுழைந்துள்ளார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. அலுவலகத்துக்குள் நுழைந்த மூன்று தீவிரவாதிகளும் கொல்லப்பட்டதாகவும், தற்போது மீட்பு நடவடிக்கை நடந்து வருவதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

”பங்குச்சந்தை அலுவகத்தின் வர்த்தக அறைக்கு வந்து, துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. இறந்தவர்களில் ஒருவர் அலுவகத்தில் பாதுகாவலர்” என பாகிஸ்தான் பங்குச்சந்தையின் இயக்குநர் அடிப் அல் ஹபிப் உள்ளூர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி நிறத்திலான (சில்வர்) கொரோல்லா காரில் தீவிரவாதிகள் வந்துள்ளனர். தாக்குதல் நடந்துள்ள கட்டிடத்திலிருந்தவர்கள், பின்னர் பத்திரமாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *