செய்திகள்

பாகிஸ்தான் நாட்டின் ஒரு நதியில் ரூ.80 ஆயிரம் கோடி தங்கச் சுரங்கம்

Makkal Kural Official

இஸ்லாமாபாத், மார்ச் 4–

80 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான தங்க புதையல் ஒன்று பாகிஸ்தான் நாட்டின் நதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் உள்ள இமயமலை தொடரின் மானசரோவர் பகுதியில் சிந்து நதி உருவாகிறது. இது லடாக் வழியாக பாகிஸ்தானிற்குள் பாய்கிறது. இந்நிலையில் சிந்து நதி மூலம் பாகிஸ்தானிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. அதாவது சிந்து நதி பள்ளத்தாக்கு பகுதியில் ஏராளமான தங்கம் புதைந்திருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இவற்றை வெளியே எடுக்க பாகிஸ்தான் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

ரூ.80 ஆயிரம் கோடி சுரங்கம்

முன்னதாக பாகிஸ்தான் அரசு மேற்கொண்ட பிரத்யேக ஆய்வில், சுமார் 80 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் புதைந்து கிடப்பதாக தெரிகிறது. இதை முழுவதுமாக வெளியே எடுத்து விட்டால் அந்நாட்டின் தலையெழுத்தே மாறிவிடும் என்கின்றனர். கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தானுக்கு இது பெரும் புதையலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் 80 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் கிடைக்கிறது என்றால் சர்வதேச அளவில் மவுசு கூடிவிடும் என்பதில் சந்தேகமில்லை.

இந்நிலையில் பாகிஸ்தான் தேசிய பொறியியல் சர்வீஸ் (NESPAK) உடன் பஞ்சாப் மாகாண சுரங்க மற்றும் தாதுக்கள் துறை கைகோர்த்துள்ளது. இதுதொடர்பாக நெஸ்பாக் மேலாண் இயக்குநர் ஸர்காம் எஸ்ஷாக் கான் பேசுகையில், அட்டோக் மாவட்டத்தில் பாயும் சிந்து நதியை ஒட்டி ஆய்வுகள் மேற்கொள்ள தனியார் நிறுவனங்கள் உடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். பாகிஸ்தான் சுரங்கத் துறையில் மிகப்பெரிய மைல்கல்லாக இந்த திட்டம் இருக்கும் என்றார்.

தற்போதைய சூழலில் தங்கத்தை படிப்படியாக வெட்டி எடுக்க பிரத்யேக திட்டங்கள் தீட்டப்பட்டு வருவது கவனிக்கத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *