செய்திகள்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக ரிஸ்வான் நியமனம்: பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் விலகல்

Makkal Kural Official

லாகூர், அக். 28

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக ரிஸ்வான் நியமிக்கப்பட்ட நிலையில் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் விலகியுள்ளார்.

டி20 உலகக் கோப்பை தொடரில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்தியா மற்றும் அமெரிக்காவிடம் தோல்வி அடைந்ததால் பாகிஸ்தான் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், பாபர் அசாம் டி20 மற்றும் ஒருநாள் அணி கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.

இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான புதிய கேப்டனாக முகமது ரிஸ்வான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். துணை கேப்டனாக சல்மான் அலி ஆகா நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியா தொடர் தொடங்க இருக்கும் நிலையில் முகமது ரிஸ்வானை கேப்டனாக பாகிஸ்தான் அணி நியமித்துள்ளது.

பயிற்சியாளர்

கேரி கிரிஸ்டன் விலகல்

இந்நிலையில் பாகிஸ்தான் ஒயிட்பால் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வந்த கேரி கிரிஸ்டன், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மே மாதம்தான் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளது. சுமார் ஆறு மாதங்கள் மட்டுமே பயிற்சியாளராக நீடித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து ஒவ்வொரு பணியாளர்களையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நீக்கி வருகிறது. கேரி கிரிஸ்டன் மட்டும்தான் நீடித்து வந்தார். இந்த நிலையில்தான் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வே செல்லும் நிலையில் கேரி கிர்ஸ்டன் அணியுடன் செல்லமாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. கிர்ஸ்டன் டேவிட் ரெய்ட்-ஐ ஹை பெர்மார்மன்ஸ் கோச்சாக நியமிக்க வலியுறுத்தியுள்ளார். ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் அவரது கோரிக்கையை நிராகரித்துள்ளது. டேவிட் ரெய்ட்-க்குப் பதிலாக மற்றொரு ஆலோசனை பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு வழங்கியுள்ளது. அதை கேரி கிர்ஸ்டன் ஏற்க மறுத்துவிட்டார். இதனால்தால் பதவியை ராஜினாமா செய்துள்ளார். டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக உள்ள ஜேசன் கில்லெஸ்பி அல்லது தேசிய அணியின் தேர்வாளராக உள்ள அக்யூப் ஜாவித் ஆகியோரில் ஒருவர் தேர்வாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *