செய்திகள்

பாகிஸ்தான் உளவாளிகள் 2 பேர் அமெரிக்காவில் கைது

வாஷிங்டன், ஏப். 8–

அமெரிக்க அதிபருக்கு பாதுகாப்பு அளிக்கும் உளவுத்துறையில் ஊடுருவிய பாகிஸ்தான் உளவாளிகள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாஷிங்டன்னில், அரியன் (வயது 40) மற்றும் ஹைய்தர் அலி (வயது 35) ஆகியோரை கைது செய்த எப்பிஐ (FBI) அதிகாரிகள் 2 பேர் மீதும் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளது. ரகசிய போலீசில் பணியாற்றிய 4 பேர் கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கொலம்பியாவில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, ஹெய்தர் அலி, தனக்கு பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., அமைப்புடன் தொடர்பு உள்ளதாக கூறியுள்ளார் என அமெரிக்க அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். பாகிஸ்தான் மற்றும் ஈரான் நாடுகளில் வழங்கப்பட்ட பல விசாக்கள் வைத்திருந்தார் எனவும் கூறினர்.

மேலும் கூறும்போது, ஹைய்தர் அலி மற்றும் அரியன் இருவரும் உள்நாட்டு பாதுகாப்பு துறையுடன், தவறான மற்றும் மோசடியான தொடர்பை பயன்படுத்தி தாங்கள் பாதுகாப்பு துறையில் பணியாற்றுவதை போல் காட்ட முயற்சித்துள்ளனர் என்றும் கூறி உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.