செய்திகள்

பாகிஸ்தான்–இந்தியா போர் தேவை இல்லாதது : தவிர்த்து இருக்கலாம்

Makkal Kural Official

மதுரையில் நடிகர் விஷால் பேட்டி

சென்னை, மே 18–

இந்தியா பாகிஸ்தான் போர் தேவையில்லாதது, அதை தவிர்த்து இருக்கலாம் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் திருமணம் மதுரை திருமங்கலத்தில் நடைபெற உள்ளது. அதில் பங்கேற்பதற்காக நடிகர் விஷால் மதுரைக்கு சென்றுள்ளார். அப்போது மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசியவர்,

“செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் திருமணத்திற்காக மதுரை வந்தேன். மதுரைக்கு வந்து மீனாட்சி அம்மன் கோவிலுக்கு போகாமல் எப்படி ஊருக்கு போக முடியும், எங்க அம்மா வீட்டுக்குள் சேர்க்க மாட்டாங்கள். எங்க அம்மா புடவை கொடுத்தாங்க, அம்மனுக்கு கொடுத்து சாமி தரிசனம் செய்தேன். 2006ல் திமிரு பட சூட்டிங்கின் போது வந்தேன்.

3 ஆண்டு தாமதம்

19 வருஷம் கழிச்சு இப்ப வந்துள்ளேன். மனசார வேண்டிக் கொண்டேன். நடிகர் சங்க கட்டிடம் தாமதத்திற்கு காரணம் நான் இல்லை ஆறு மாதத்தில் முடிக்க வேண்டியதை நடிகர் சங்கம் தேர்தல் வைத்து எண்ணிக்கை என்ற பேரில் நீதிமன்றம் சென்றதால் 3 வருடம் தாமதம் ஆகிவிட்டது. இன்னும் 4 மாதத்தில் கட்டிடம் பெரிசாக வந்துவிடும்.

இந்தியா பாகிஸ்தான் போர் தேவையில்லாதது இதை தவிர்த்து இருக்கலாம், நம்மளை பாதுகாக்கும் ராணுவ வீரர்கள் உயிரிழக்கும் போது கஷ்டமாக இருக்கிறது. எல்லா நாட்டிற்கும் எல்லைகள் போடப்பட்டுள்ளது அதை புரிந்து கொண்டு செயல்பட்டால் போரே தேவையில்லை. மதுரை மக்கள் ஒரு விஷயத்துல மாறவே மாட்டாங்க. ஒன்று பாசம் மற்றொன்று உணவு இரண்டு விஷயத்தில் மாறவே மாட்டார்கள். நூறு வருஷம் கழிச்சு வந்தாலும் அதே பாசம் சிரிப்பு இருக்கும். நானும் மதுரைக்காரன்தான் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *