செய்திகள்

பாகிஸ்தானில் கனமழை: வெள்ளத்தில் 416 குழந்தைகள் உள்பட 1208 பேர் பலி

இஸ்லாமாபாத், செப். 3–

பாகிஸ்தானை புரட்டிப்போட்டுள்ள கனமழை வெள்ளப்பெருக்கில் சிக்கி, 416 குழந்தைகள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், அடுத்த சில நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வரலாறு காணாத கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் பாகிஸ்தானின் பல்வேறு மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள், 18,000 பள்ளிகள் மற்றும் மருத்துவனைகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. போக்குவரத்து உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளும் துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.

416 குழந்தைகள் பலி

இதுவரை கனமழை வெள்ளப்பெருக்கிற்கு 416 குழந்தைகள் உட்பட ஆயிரத்து 208 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், பாகிஸ்தான் ராணுவம் மற்றும் பிற அரசு சாரா அமைப்புகள் மூலம் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், நாடு முழுவதும் அடுத்த சில நாட்களுக்கு கனமழை தொடரும் என பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.