இஸ்லாமாபாத், நவ.15–
தேசிய நிலநடுக்கவியல் மையம் கூறியுள்ளபடி, பாகிஸ்தானில் இன்று அதி காலை 5.35 மணியளவில் 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதுகுறித்து தேசிய நில அதிர்வு மையம் எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருப்பதாவது: –
பாகிஸ்தானில் இன்று அதிகாலை 5.35 மணியளவில் 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் பாகிஸ்தானில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் காலை 5.35 மணியளவில் பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இந்த நடுநடுகத்தால் உயிர்சேதமோ அல்லது சேதங்கள் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
இலங்கையில் நிலநடுக்கம்
இலங்கை தலைநகர் கொழும்புவில் நேற்று பிற்பகல் 12.31 மணியளவில் 1,326 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்திய பெருங்கடலில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 எனப் பதிவாகியுள்ளது.
இதனால் தலைநகர் கொழும்புவில் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நடுநடுகத்தால் உயிர்சேதமோ அல்லது சேதங்கள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.