சிறுகதை

பாகப்பிரிவினை – ஆர் வசந்தா

அமிர்தம்மாளுக்கு மூன்று மகன்கள் ஒரு மகள் கணவன் சுந்தரேஸ்வரன் ஒரு கடை நடத்தி வந்தான். கடை தவிர வேறு நினைப்பே இருக்காது. அதனால் கடை நன்றாகவே நடந்தது.

மூன்று மகன்களும் நன்றாகவே படித்து வந்தார்கள். மூவரையும் கவர்ன்மெண்ட் வேலையில் சேர்த்து விட வேண்டும் என்பது ஒன்றே சுந்தரேஸ்வரனின் லட்சியம். ஒரு தோட்டம் மட்டும் வைத்திருந்தார். பக்கத்திலிருந்த சிறு நிலங்கள் விலைக்குவந்தால் தன் தோட்டத்துடன் சேர்த்து விடுவார். தோட்டத்தையும் கவனமாக மேர்பார்வையிட்டு வருவார். அதைக் கவனிக்கும் பொறுப்பு சுந்தரேஸ்வரனின் தாயைச் சேர்ந்தது. சில சமயங்களில் பேரன்கள் மூவரையும் அழைத்துச் செல்வார் தான் தோட்டம் போகும்போது. அதனால் பேரன்கள் விவசாயத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தனர்.

மகள் சுசீலாவையும் பக்கத்து ஊர் பெரியசாமி என்பர் வீட்டிலும் பேசி முடித்து விட்டார். அவர்கள் குடும்பமும் வசதியான வீடாகவே அமைந்து விட்டது. அவர்கள் ஜவுளி, நூல் வியாபாரம் செய்து வந்தனர்.

சுந்தரேஸ்வரனும் அவன் தாயும் ஒன்றன்பின் ஒன்றாக இறந்தனர்.

எல்லாம் பொறுப்புகளையும் அமிர்தம்மாளே மேற்கொண்டார். அவள் தன் மகள் சுசீலாவின் மீது கொஞ்சம் அதிகப் பிரியம் வைத்திருந்தாள்.

கடை அவளின் மேற்பார்வையில் விடாமல் நடத்தி வந்தாள். தோட்டத்தை நான்கு பிரிவாக மனதுக்குள் பிரித்து வைத்திருந்தாள்.

ஒரு பிரிவை தன் மூத்த மகனிடம் ஒப்படைத்தார். இதை பழ மரங்களாக நட வேண்டும். தேவையான பழங்களை நம் வீட்டிற்கு தேவையானவற்றை நாமே பறித்துக் கொள்ளவேண்டும் என்று அறிவுரை கூறினாள். மகன் சிங்காரவேலனும் ஆபிஸ் வேலையுடன் கண்ணும் கருத்தாகச் செய்து வந்தான். மாமரம், கொய்யா, பப்பாளி சப்போட்டா என்ற மரங்கள் நட்டு சுவையான பழங்கள் தந்தன அவை.

இரண்டாவது மகன் பழனிவேலை அழைத்து ஒரு பகுதியை அவனிடம் ஒப்படைத்தாள். இந்த இடத்தில் நீ காய்கறிகளை பயிரவேண்டும் என்றாள். சரி என்று கூறிய பழனி வேல் உழுது, உரமிட்டு காய்கறிகளை விளைவித்தான், கத்தரிக்காய், வெண்டைக்காய், கொத்தவரங்காய் தக்காளி தட்டாங்காய்கள் விளைவித்து வந்தான். ஆபீஸ் முடிந்து விட்டால் தோட்டம் தான் அவனுக்கு.

மூன்றாவது இடத்தை தன் மூன்றாவது மகனிடம் ஒப்படைத்தாள். அதில் அவன் வேலை கம்பு, கேழ்வரகு, சோளம் முதலிய தானியங்கள் பயிரவேண்டும். நம் வீட்டிற்குத் தேவையான தானியங்களை நாமே பயிர் செய்து சாப்பிட வேண்டும் என்றார்.

மூவருக்கும் தனித்தனியாக வீடு கட்டியும் கொடுத்துவிட்டாள்.

ஒரு ஓரமாக தோட்டத்தில் ஒரு சிறு வீடும் கட்டினாள். அதில் தோட்டத்திற்குத் தேவையான கருவிகளைப் போட்டிருப்பாள். முக்கியமாக கம்பறுத்தி, மண்வெட்டி, உழவு சம்பந்தமான கடப்பாரை வாளியும் வைத்திருப்பாள். நடுவில் ஒரு கிணறும் வெட்டி வைத்திருந்தாள். பம்ப் செட்டும் ஏற்பாடு செய்திருந்தாள். தண்ணீர் பஞ்சமில்லாமல் செழிப்பாக இருந்தது தோட்டம். ஒரு சிறிய பகுதியை மூலிகைச் செடியும் பயிர் செய்தாள்.

துளசி, கண்டங்கத்தரி, சித்தகசத்தி, காதட்டி, மணத்தக்காளி, கச்சந்திரா போன்ற மருத்துவ குணமுடைய செடிகளை அவளே நேரில் இருந்து வளர்த்து வந்தாள். துளசி சளிபோக்கும் மருந்தாகும் என்பாள். கண்டங்கத்திரி கஷாயம் காய்ச்சலுக்கு நல்லது. அதை காய்ச்சி கஷாயமாக கொடுப்பதுடன் இந்த செடியின் கஷாயம் விஷக்காய்ச்சலையும் முறிக்கும் என்பார். இந்த கஷாயம் குடித்தால் கொரோனா போன்ற கொடிய சுரங்களும் பறந்து விடும் என்பாள். சித்தகத்தியையும் காதட்டி என்ற செடிகளிலிருந்து எண்ணெய் காய்ச்சி தன் பையன்களுக்கு வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் குளிக்க வேண்டும் என்று எண்ணெய் காய்ச்சிக் கொடுப்பாள். கச்சந்திரா என்ற செடியை தண்ணீரில் ஊற்றி காய்ச்சி குழந்தைப் பெற்ற மருமகளுக்கு கண்டிப்பாக கொடுத்துவிடுவாள். மிகமிக கசப்பாக இருக்கும். அதைக் காய்ச்சிய பாத்திரத்தைக் கூட குப்பையில் போடத்தான் வேண்டும் என்பாள்.

அமிர்தம்மாள் தன் மகன்களுக்கு ஒரு கண்டிஷனும் போட்டிருந்தாள். முதலில் பறிக்கும தன் காய்களையோ, பழங்களையோ, தங்கள் குலதெய்வமான பாம்புலம்மனுக்கு செலுத்திவிட வேண்டும் என்பாள். இரண்டாவது பறிக்கும் காய், கனி வகைகள் தானியங்கள் முதலியவற்றை தன் சகோதரி சுசீலா வீட்டிற்கு அனுப்பி விடவேண்டும் என்பது அமிர்தம்மாளின் கண்டிப்பு, தன் வீட்டு வேலக்காரர்களின் மூலம் அவை பொகும் சிலநினங்ளில் சுசீலா பலகாரமாகச் செய்து அனுப்பி விடுவாள்.

கேழ்வரகு முறுக்காகவும் கொழுக்கட்டை, புட்டாகவும் அல்லது புதிய முறை பலகாரமாகவும் திருப்பிவரும். கம்பு வென்ணி அரிசி என்று செய்து வெங்காயம், தக்காளி போட்டு மசாலா கம்பரிசியாக சுசீலா செய்து அனுப்புவாள். வெள்ளை சோளத்திலிருந்து குழிப்பணியாரம் செய்து அனுப்புவாள்.

சோளம் ஒருமுறை அவலாகச் செய்து அனுப்பினாள். அது புதுவையாகவும் வித்தியாசமாகவும் இருந்தது. அண்ணன்கள் தன் தங்கை க்கு செய்த பலகாரங்கள் அனைத்தையும் விரும்பிடுவதுடன் தன் தங்கையை பெரிதும் புகழ்வார்கள்.

அமிர்தம்மாள், தன் மகள் சுசீலாவுக்கு பாதித் தோட்டம் கொடுக்கவேண்டும் என்பது அபிப்ராயம். ஆனால் மகன்கள் சம்மதிக்க வில்லை. மகன்கள் தோட்டம் தங்களுக்கு மட்டுமே என்றனர். சிங்காரவேல், பழனிவேல், குமாரவேல் மூவரும் தங்களுக்குள் ஏதாவது பிரச்சனை என்றால் பண்ணை வீட்டிற்குவந்து கலந்து பேசி முடிவெடுப்பார்கள். அந்த தோட்டத்திற்கும் சுந்தரேசன் பண்ணை தோட்டம் என்றே பெயரிட்டிருந்தனர்.

ஒருநாள் தன் மகள் வயிற்றுப் பேத்தி அல்லியையும் தன் மகன் வயிற்றுப் பேரன் விமலனையும் தூக்கிக் கொண்டு போனாள். இருவரும் துருவித் துருவி எல்லாவற்றையும் கவனித்துக் கேட்டார்கள். அமிர்தம்மாளும் குழப்பதுடன் வந்தாள். தோட்டத்தை எப்படி பிரிப்பது என்ற யோசனைதான்.

தோட்டத்தை சுற்றி வரும்போது இடுப்பில் இருந்த மகள் வயிற்றுப் பேத்தி கேட்டாள். இந்த சிறிய தோட்டம் உங்களுடையதா? என்றாள். கீழே நடந்த தன் மகன் வயிற்றுப் பேரன் கேட்டான். இந்த பெரிய தோட்டம் நம்முடையதா பாட்டி என்றான்.

இதைக் கேட்ட அமிர்தம்மாளுக்கு பாகபிரிவினை செய்வது எப்படி என்று புரிந்தது. உடனே இடுப்பில் இருந்த அல்லியை கீழே இறக்கிவிட்டாள். நடந்து வந்த மகன் வயிற்றுப் பேரன் விமலனை வாரி அணைத்து உச்சி முகர்ந்து இடுப்பில் தூக்கிக் கொண்டாள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *