செய்திகள்

பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.1 கோடி நன்கொடை

Makkal Kural Official

சென்னை, மே 16 –

பஹல்காம் பகுதியில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பிரதமர் தேசிய நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி நன்கொடையாக வழங்குவதாக எஸ்.ஆர்.எம். நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் வேந்தர் டி.ஆர்.பாரிவேந்தர், பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

பஹல்காம் துயரச் சம்பவத்தில் உயிரிழந்த வீரர்களுக்கு வீர வணக்கத்தையும், அவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த பிரார்த்தனைகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். மத்திய அரசு மற்றும் ஆயுதப் படைகள் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் எனும் வெற்றிகரமான முன்னெடுப்பு பாராட்டத்தக்கது. இது நாட்டின் இறையாண்மையை பாதுகாக்கும் வலிமையான உறுதியின் வெளிப்பாடாக உள்ளது.

இந்த நடவடிக்கையில் காட்டப்பட்ட தைரியம் மற்றும் துல்லியமான செயல் மிகுந்த தேசியப் பெருமையையும், நன்றியையும் ஊட்டியுள்ளது. எஸ்.ஆர்.எம். வழங்கும் ரூ.1 கோடி நிதி பாதிக்கப்பட்டோரின் நலனுக்கும், மறுவாழ்வுக்கும் பயன்படுத்தப்படும்.

மேலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளின் உயர்கல்விக்கு தேவையான ஆதரவை அவர்களின் கல்விப் பயணம் முழுமை அடையும் வரை வழங்கத் தயாராக இருக்கிறோம். இந்த உதவி பயனுள்ள வகையில் வழங்கப்படுவதற்காக அரசு அல்லது அதன் நிர்ணயிக்கப்பட்ட அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றுவதற்கும் எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் தயாராக உள்ளது.

இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *