செய்திகள்

பழைய பாராளுமன்றத்திற்கு பிரியாவிடை: அனைத்து எம்.பி.க்களும் குழு புகைப்படம்

புதுடெல்லி, செப். 19–

பாராளுமன்ற பழைய கட்டடத்தில் இரு அவைகளின் உறுப்பினர்களும் இன்று காலை குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

பாராளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரின் முதல் நாளான நேற்று பழைய நாடாளுமன்ற கட்டடத்துக்குப் பிரியாவிடை அளிக்கும் வகையில், கடந்த 75 ஆண்டுகளில் நாடாளுமன்றம் கடந்து வந்த பாதைகள் குறித்த விவாதம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று பிற்பகலில் புதிய கட்டடத்தில் இரு அவைகளின் அலுவல்களும் தொடங்கவுள்ளன. 22–ந்தேதி வரை புதிய கட்டிடத்தில் சிறப்பு கூட்டத்தொடர் நடக்க உள்ளது.

இந்த நிலையில் பழைய கட்டடத்தின் வளாகத்தில் மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள் இணைந்து குழுப் புகைப்படத்தை இன்று காலை எடுத்துக் கொண்டனர்.

மக்களவை தலைவர் ஓம் பிர்லா, பிரதமர் நரேந்திர மோடி, மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மத்திய அமைச்சர்கள், சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்பட இருஅவைகளை சேர்ந்த 750 எம்.பி.க்கள் ஒன்றாக நின்று குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

அப்போது பாரதீய ஜனதா மக்களவை எம்.பி. நர்ஹரி அமீன் திடீரென்று மயங்கி விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவருக்கு மற்ற உறுப்பினர்கள் உதவினர். பின்னர் சிறிது நேரத்தில் அவர் சகஜ நிலைக்கு திரும்பி புகைப்பட அமர்வில் பங்கேற்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *