செய்திகள்

பழுதடைந்து நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்: பனியன் தொழிலாளர்கள் 4 பேர் பலி

திருப்பூர், மார்ச் 22–

அவிநாசி அருகே பழுதடைந்து நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பனியன் தொழிலாளர்கள் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள பெருமாநல்லூர் சாலை பூலுவபட்டியை சேர்ந்த சுப்பிரமணியத்தின் மகன் சபரி பாலமுருகன்(25). செட்டிபாளையத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் மகன் பிரவீன்(24), அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகத்தின் மகன் ஆனந்த் (26) மற்றும் பாண்டியன் நகர் பிரகாஷ் மகன் பாலமுருகன் (23). இவர்கள் ஒரே பனியன் நிறுவனத்தில் தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர்.

இவர்கள் 4 பேரும் நேற்றிரவு ஒன்றாக சேர்ந்து மது அருந்தி உள்ளனர். பின்னர் ஒரே மோட்டார் சைக்கிளில் பெருமாநல்லூர்- – கோவை தேசிய நெடுஞ்சாலையில் வேகமாகச் சென்றுள்ளனர். அப்போது ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி, ராக்கியாபட்டி அருகே சென்றபோது, ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு சரக்கு ஏற்றிச் சென்ற லாரி பழுதடைந்து நின்றுள்ளது. திடீரென எதிர்பாராத விதிமாக லாரியின் பின்பக்கத்தில் மோட்டார் சைக்கிள் பயங்கர வேகத்தில் மோதியது. இதில் சபரி பாலமுருகன், ஆனந்த் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து பலத்த காயம் அடைந்த பாலமுருகன் மற்றும் பிரவீன் ஆகியோரைப் பொதுமக்கள் மீட்டு, திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர்கள் இருவரும் இறந்தனர்.

இது தொடர்பாக பெருமாநல்லூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *