சென்னை, ஜன. 25–
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட் ஏவப்பட உள்ளதால் வரும் 29ம் தேதி பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) 2–-ம் தலைமுறைக்கான என்.வி.எஸ்.02 என்ற வழிசெலுத்தல் செயற்கைக்கோளை தயாரித்துள்ளது. 2 ஆயிரத்து 232 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோளின் ஆயுட்காலம் சுமார் 12 ஆண்டுகளாகும். இதனை விண்ணில் ஏவுவதற்காக ஜி.எஸ்.எல்.வி- எப்-15 ராக்கெட்டை விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். இது ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து வருகிற 29-ந்தேதி காலை 6.30 மணி அளவில் விண்ணில் ஏவப்படுகிறது. இதனால் பாதுகாப்பு கருதி பழவேற்காடு மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
#ISRO #SRI HARI KOTA #rocketlaunch