செய்திகள்

பழங்கள் பழுக்கும் தன்மையைக் கண்டறியும் டேக்டைல் பிரெஷர் சென்சார்

ஜோத்பூர் ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு

ஐஐடி ஜோத்பூர் ஆராய்ச்சியாளர்கள் குறைந்த செலவில் ஒரு சென்சாரைக் கண்டுபிடித்துள்ளனர். அதிக உணர்திறன் கொண்ட டேக்டைல் பிரெஷர் சென்சாரைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த சென்சார் பழங்கள் பழுக்கும் தன்மையைக் கண்டறிந்து காட்டிவிடும்.

இந்த சென்சார் நானோ நீடில் பாலிடிமெதில்சிலோக்சினை (PDMS-Polydimethylsiloxane) மின்கடத்தா அடுக்காகப் பயன்படுத்தி பழுக்கும் தன்மையைக் கண்டறிகிறது. நெகிழ்தன்மை கொண்ட இந்த சென்சாரை ஐஐடி ஜோத்பூர் குழுவினர் பரிசோதனை செய்து பார்த்தனர்.

எலாஸ்டிக் மாடுலன்ஸ், மின்தேக்கத் திறன் (Capacitanance) ஆகியவற்றைக் கணக்கிட்டு, ஆராய்ச்சியாளர்கள் வெவ்வேறு வகை தக்காளிகளின் பழுக்கும் தன்மை கண்டறிந்துள்ளனர்.“அதிக உணர்திறன் கொண்ட டேக்டைல் பிரெஷர் சென்சாரை ஒரு ரோபோடிக் அமைப்புடன் இணைப்பதன் மூலம் பழங்கள் பழுக்கும் தன்மையைக் கண்டறியும் முறையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்த முடியும்,” என்கிறார் ஐஐடி ஜோத்பூர் எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் அஜய் அகர்வால்.

பழங்கள் பழுக்கும் தன்மையை அடிப்படையாகக் கொண்டு அவை வகைப்படுத்தப்படும். இந்த செயல்முறைக்கு, ஐஐடி ஜோத்பூரின் இந்தப் புதுமையான தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு மிகப்பெரிய அளவில் உதவும்.

வழக்கமாக சில பழங்களின் பழுக்கும் தன்மை ரசாயனங்கள் கொண்டு கண்டறியப்படும். இது ஆபத்தானது. சில இடங்களில் இமேஜ் பிராசசிங் முறை பயன்படுத்தப்படுகிறது என்றாலும் இந்த முறையை சில குறிப்பிட்ட பழ வகைகளுக்கு மட்டுமே பயன்படுத்தமுடியும். பழங்களின் நிறம் மாறுவதை அடிப்படையாகக் கொண்டு பழுக்கும் தன்மை கண்டறியப்படுவதுண்டு என்றாலும் சில பழங்களுக்கு இது பொருந்துவதில்லை.

இதுபோன்ற சூழலில் சென்சிடிவ் டேக்டைல் சென்சார்களை ரோபோடிக் அமைப்பில் இணைப்பது அவசியமாகிறது. பழங்களை அறுவடை செய்யும் நேரத்திலும் அவற்றை வெவ்வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லும் நேரத்திலும் அவற்றின் பழுக்கும் தன்மையைக் குறைந்த செலவில் கண்டறிய முடிகிறது. வெவ்வேறு பழ வகைகளின் பழுக்கும் தன்மையை சிறப்பாக மதிப்பிட முடிகிறது. இவை இந்த கண்டுபிடிப்பின் சிறப்பம்சங்கள்.

முக்கியமாக இந்த கண்டுபிடிப்பு பழங்கள் வீணாகும் அளவையும் குறைக்கிறது. பழுக்கும் தன்மையைக் கண்டறியும் சென்சார் மூலம் தரமான பழங்கள் கிடைப்பதால் ஏற்றுமதி செய்யப்படும் அளவும் அதிகரிக்கும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *