செய்திகள்

பள்ளி வகுப்பறை தேர்தலில் மாணவியிடம் தோல்வி: மாணவன் தற்கொலை

ஐதராபாத், ஜூலை 20

பள்ளியில் 8 ஆம் வகுப்பு பொறுப்பாளர் தேர்தலில், மாணவியிடம் தோல்வியடைந்த மாணவன், ரெயில்முன் குதித்து தற்கொலை செய்து கொண்டான்.

ஆந்திர மாநிலம் போன்கீர் மாவட்டத்திலுள்ள யாதாத்ரி அடுத்த ராமண்ணப்பேட்டையிலுள்ள தனியார் பள்ளியில் 8 ஆம் வகுப்பில் சரண் (வயது 13) என்ற மாணவன் படித்து வந்தான். ஆசிரியர் இல்லாத நேரத்தில் வகுப்பறையை பார்த்துக்கொள்ளும் வகையிலான மாணவர் தேர்தல், கடந்த 16 ந்தேதி நடைபெற்றது. இதில், ஒரு மாணவியிடம், சரண் தோல்வியடைந்தார்.

இதனால் மனம் உடைந்த நிலையில் இருந்தார். இந்நிலையில், நல்கொண்டா அருகே, ரெயில்வே பாதையில் மாணவன் சரணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. வகுப்பறை தேர்தலில் தோற்றதால் மானமுடைந்த சரண், ரெயில் முன்னர் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருப்பது, விசாரணையில் தெரிய வந்தது. நேற்று அந்த பகுதி பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், ரெயில் பாதையில் கிடந்த மாணவனின் உடலைக் கைப்பற்றி, மருத்துவமனைக்கு உடற்கூறு சோதனைக்கு அனுப்பி வைத்து, ரெயில்வே போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

மாணவன் சரணின் தந்தை, ராமணாப்பேட்டையில் மளிக்கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம், பள்ளிக்குச் சென்ற தனது மகன் வீடு திரும்பவில்லை என்று உள்ளூர் போலீசில் புகார் அளித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *