செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கான தடுப்பூசி: நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில்

சென்னை, ஆக. 4–

இந்திய மருத்துவ ஆய்வு கழகம் வழிகாட்டுதல் வழங்கிய பிறகு, 18 வயதிற்கு குறைவான மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

18 வயதிற்கு குறைவான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்துவதற்கான திட்டத்தை வகுக்கக்கோரி, நேர்வழி இயக்க அறக்கட்டளை, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசுத் தரப்பில், முன்னுரிமை அடிப்படையில் பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள் என அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.

விரைவில் தடுப்பூசி

மேலும் உயர்நிலை பள்ளிகளில் படிக்கும் 18 வயதிற்கு குறைவான மாணவர்களுக்கு, கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் இதுவரை எந்த வழிகாட்டுதல்களையும் வழங்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இந்திய மருத்துவ ஆய்வு கழகம் வழிகாட்டுதல் வழங்கிய பிறகு, பள்ளி மாணவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் திட்டம் முழுமையாக அமல்படுத்தப்படும் எனக் கூறபட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை வரும் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *