வாழ்வியல்

பல நன்மை தரும் நீச்சல் பயிற்சி

Spread the love

நீச்சல் பயிற்சியால் உடலுக்குப் பல நன்மைகள் கிடைக்கின்றன.

நீச்சல் முதியவர்கள் முதல் சிறியவர்கள் வரை எல்லா வயதினருக்கும்

ஏற்ற உடற்பயிற்சியாகும்.

உடல் ஊனமுற்றவர்களுக்குக்கூட இது மிகச்சிறந்த உடற்பயிற்சி.

*

உடலை வலுவாக்கவும் கிடைத்த வலுவைப் பாதுகாத்துக்

கொள்ளவும் உதவுகிறது.

நீச்சல் பயிற்சி உடலில் உள்ள பலவகையான உள் உறுப்புகளுக்கும்

நரம்பு அமைப்புகளுக்கும் வலுவை அளிக்கிறது.

*

குறைந்த காலத்தில் உடலில் உள்ள பலவகையான தசைகளுக்கு

நல்ல வலுவை அளிக்கிறது. உடலின் தேவையற்ற, அதிகமான

எடையைக் குறைக்க துணை புரிகிறது.

*

நீச்சல் பயிற்சியின்போது நீர் உடலுக்கு இயற்கையின்

தடுப்பாற்றலை அளிக்கிறது.

தினமும் ஒரு குறிப்பிட்ட நேரம் தொடர்ந்து நீச்சல் பயிற்சி

மேற்கொள்வதால் தேவையற்ற கலோரிகளை எரிக்க முடியும்.

*

நீச்சலானது உள்ளத்துக்கு எளிதில் உணர்ச்சிவசப்படாத

மனப்பக்குவத்தையும் எந்தச் செயலையும் நிதானத்துடன்

செய்யும் மனப்பக்குவத்தையும் அளிக்கிறது.

*

நீச்சல் கவலையை மறக்க மிகச்சிறந்த மருந்தாகும். ஏனென்றால்

நீந்தும்போது கவனம் முழுவதும் நீச்சலில் ஒரு முகப்படுவதால்

மனிதன் தன்னுடைய கவலையை மறக்க நீச்சல் துணைபுரிகிறது.

*

நீச்சல் முதுகெலும்புப் பகுதியில் உள்ள தசைகளை வலுப்பெறச்

செய்வதோடு முதுகெலும்பு அமைப்புகளை வலுப்படுத்தத் துணைபுரிகிறது.

கடல் நீரிலும் ஆற்று நீரிலும் இயற்கையாகப் பொதிந்திருக்கும்

அயனிகள் உடலுக்கு நன்மை அளிக்கிறது

*

நீச்சல் உடலில் உள்ள மேற்புறத் தசைகளுக்கு மட்டுமின்றி உடலின்

கிழ்ப்புறப் பகுதியில் உள்ள தசைகளுக்கும் ஒரே சமயத்தில் நல்ல

பயிற்சியைத் தரக்கூடியது.

இதயத் தசைகள் நன்கு வலுப்பெற நீச்சல் உதவி செய்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *