செய்திகள்

பல் மருத்துவ படிப்பில் ஆர்வம் காட்டாத மாணவர்கள்

Spread the love

சென்னை, ஜூலை 20

மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பு மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில் பி.டி.எஸ். படிப்பு ஆகியவற்றுக்கு நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். கவுன்சிலிங் முடிந்ததையடுத்து பல் மருத்துவ கல்லூரி மாணவர்கள் தேர்வு கவுன்சிலிங்கும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. எம்.பி.பி.எஸ். படிப்பில் அனைத்து இடங்களும் நிரம்பி விட்டன.

ஆனால் பல் மருத்துவ கல்லூரியில் உள்ள பி.டி.எஸ். படிப்புக்கு மாணவர்கள் ஆர்வம் காட்டவில்லை. மாநிலத்தில் தனியார் பல் மருத்துவ கல்லூரிகளில் மொத்தம் 1760 இடங்கள் உள்ளன. இதில் 69 சதவீதம் மாநில அரசுக்கு ஒதுக்க வேண்டும் என்பது விதி ஆகும். அதன்படி 1070 இடங்கள் அரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மீதி 690 இடங்கள் தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீடு ஆகும்.பல் மருத்துவ கவுன்சிலிங் முடிந்துவிட்ட நிலையில் மாணவர்கள் ஆர்வம் காட்டாததால் பெரும்பாலான இடங்கள் காலியாக உள்ளன. அரசு ஒதுக்கீட்டுக்கான 1070 இடங்களில் 417 இடங்கள் காலியாக உள்ளன.நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ள 690 இடங்களில் 640 இடங்கள் காலியாக உள்ளன. இதன்படி மொத்தம் 1057 இடங்கள் காலியாக இருக்கின்றன.

முதல் கட்ட கவுன்சிலிங் முடிந்து இவ்வளவு காலி இடம் இருப்பதால் கவுன்சிலிங்கை மேலும் நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *