செய்திகள்

பல்வேறு நாடுகளில் பணி முடித்து காஞ்சீபுரம் வந்த 16 நபர்களை தனிமைப்படுத்த உத்தரவு

Spread the love

பல்வேறு நாடுகளில் முஸ்லிம் புகழ் பரப்பும் பணி முடித்து காஞ்சீபுரம் வந்த 16 நபர்கள்:

தனிமைப்படுத்த கலெக்டர் பொன்னையா உத்தரவு

 

காஞ்சீபுரம்,மார்ச் 26-

பல்வேறு நாடுகளில் முஸ்லிம் புகழ் பரப்பும் பணியை முடித்து விட்டு காஞ்சீபுரம் பள்ளிவாசலுக்கு வந்த 16 நபர்களை தனிமைப்படுத்த மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதையொட்டி காஞ்சீபுரம் நகரம் முழுவதும் மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். மேலும், வெளிநாட்டில் இருந்து வந்தவர்களை கண்டறிந்து, அவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது.

அதையொட்டி, கடந்த 45 நாட்களுக்கு முன்பு இந்தோனேஷியா மலேசியா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து இந்தியா வந்து பல்வேறு பள்ளிவாசலில் முஸ்லிம் புகழ் பரப்பும் பணியை முடித்துவிட்டு மார்ச் 5ம்தேதி காஞ்சீபுரம் வந்த 16 முஸ்லிம் நபர்கள், காஞ்சீபுரம் காந்திரோடு தேரடி அருகே உள்ள பள்ளிவாசலில் மசூதிகளில் புகழ் பரப்பும் பணியினை செய்வது கண்டறியப்பட்டனர். இதையொட்டி மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா அங்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பிறகு கொரோனா தொற்று எதிர்ப்பு நடவடிக்கையின் கீழ் தனிமைப்படுத்த திட்டமிட்டு, அவர்கள் அனைவரையும் பள்ளிவாசலில் தனிமைப்படுத்த கலெக்டர் உத்தரவிட்டார்.

மேலும் மசூதி முழுவதும் கிருமி நாசினி மருந்தை சுகாதாரத்துறையினர் தெளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *