வாழ்வியல்

பல்வேறு சிறுதானியங்களும் அதிலுள்ள சிறந்த பலன்களும்–2

குதிரைவாலி

குதிரைவாலியில் இரும்புச்சத்து, நார்ச்சத்து, சுண்ணாம்புச்சத்து நிறைந்துள்ளன. புரதச்சத்தும் உயிர்ச்சத்தும்கூட அதிகமாக இருக்கின்றன. இதில் உள்ள நார்ச்சத்து, புற்றுநோய், உயர் ரத்த அழுத்தம், இதய நோய்களைத் தவிர்க்க உதவும். செல்களைப் பாதுகாக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகச் செயல்படும் தன்மை இதற்கு உண்டு.

வாயுக் கோளாறுகளைத் தீர்க்கும். இடுப்புவலி, வயிற்றுக் கடுப்பு, காய்ச்சல் போன்ற நேரங்களில் குதிரைவாலி களி, குதிரைவாலி கஞ்சி சிறந்த உணவாக இருக்கும்.

வரகு

உடலுக்கு அதிகச் சக்தியளிக்கும் வரகில், அரிசி, கோதுமையைவிட நார்ச்சத்து அதிகம். விரைவில் செரிமானமாகும் தன்மைகொண்டது. மேலும் தானியங்களில் அதிகம் புரதம், தாது உப்புகளைக் கொண்டது. இதில், பாஸ்பரஸ், மக்னீசியம், மாங்கனீஸ், காப்பர், இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் பி அனைத்தும் நிறைந்துள்ளன.

சிறுநீர்ப் பெருக்கி; மலச்சிக்கலை போக்கும்; உடல்பருமனைக் குறைக்கும். ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், தேவையற்ற நச்சுகளை வெளியேற்றி ரத்த ஓட்டத்தைச் சீர்செய்யவும் உதவும். கல்லீரலைச் சீராக்கும், நரம்பு மண்டலத்தையும், எலும்புகளையும் பலப்படுத்தும். மாதவிடாய்க் கோளாறு உள்ள பெண்களுக்கு வரகு, வரம். இதில் புட்டு, வெண்பொங்கல், கார பணியாரம், இட்லி, புளியோதரை, உப்புமா என விதவிதமாகச் செய்ய முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *