வாழ்வியல்

பல்வேறு சிறுதானியங்களும் அதிலுள்ள சிறந்த பலன்களும்–1

நம் பாட்டியும் தாத்தாவும் வயதான காலத்திலும் ஆரோக்கியத்தோடு வாழ்வதைப் பார்த்திருப்போம். அதற்குக் காரணம், அவர்கள் சிறுவயதில் சாப்பிட்ட சிறுதானியங்களால் ஆன பாரம்பரிய உணவுகள் தான். இவற்றில் புரதம், நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின்கள் போன்ற ஊட்டச்சத்துகள் அதிக அளவில் உள்ளன. அந்தவகையில் ஏழு சிறு தானியங்களும் அவற்றில் ஒளிந்துள்ள எக்கச்சக்க பலன்களும் குறிந்து இப்போது பார்க்கலாம்.

தினை

திணை புரதம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் பி, பாஸ்பரஸ், மாவுச்சத்து, சுண்ணாம்புச்சத்து போன்ற பல ஊட்டச்சத்துக்களைக் கொண்டது. இதயத்தைப் பலப்படுத்தவும், கண்பார்வை சிறப்பாக இருக்கவும் உறுதுணையாக இருக்கும்.

குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு தினையைக் கூழாக்கித் தருவார்கள்; அது, தாய்ப்பால் நன்கு சுரக்க உதவும். இது கபம் தொடர்பான நோய்களை நீக்கும். வாயுத்தொல்லையை விரட்டும். தினையில் இட்லி, அல்வா, காரப் பணியாரம், பாயசம், அதிரசம் ஆகியவற்றைச் செய்து சாப்பிடலாம்.

கேழ்வரகு / ராகி

அரிசி, கோதுமையைவிட கேழ்வரகில் ஊட்டச்சத்துகள் அதிகம். குறிப்பாக சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து, பாஸ்பரஸ், நார்ச்சத்து, வைட்டமின் பி அதிக அளவில் உள்ளன. இதனால் எலும்புத் தேய்மானம், ரத்தசோகை, இதய நோய், மலச்சிக்கல், சர்க்கரை நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டோருக்கு சிறந்தது.

ராகியைக் களியாகச் செய்து சாப்பிட்டால், உடல் உஷ்ணம் நீங்கும்; உடல் வலிமை பெறும். உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு ஏற்றது. அஜீரணக் கோளாறுகள் நீங்கும்; குடற்புண்கள் குணமாகும்; பெண்களுக்கு மாதவிடாய்க் கோளாறுகள் சீராகும். கர்ப்பிணிப் பெண்கள் தினமுமே சாப்பிட்டுவரலாம். கேழ்வரகில் கூழ் செய்து பச்சிளம் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். இதில், இட்லி, தோசை, கொழுக்கட்டை, இடியாப்பம், அடை, இனிப்பு வகைகள் என பலவற்றைச் செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *