செய்திகள்

பல்லாவரம், வண்டலூரில் ரூ.137.66 கோடியில் 2 மேம்பாலங்கள்: முதலமைச்சர் நாளை திறக்கிறார்

பல்லாவரம், வண்டலூரில் ரூ.137.66 கோடியில் 2 மேம்பாலங்கள்: முதலமைச்சர் நாளை திறக்கிறார்

மாவட்ட செயலாளர்கள் சிட்லபாக்கம் ச.ராசேந்திரன், திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் பார்வையிட்டனர்

காஞ்சீபுரம்,செப்.16-

தமிழக மக்களின் கோரிக்கைகளுக்கு விரைவாக தீர்வு காணும் வகையில் தமிழக அரசு பல்வேறு சீரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் சென்னை புறநகரில் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரத்தில் ரூ. 82.66 கோடியிலும் வண்டலூரில் ரூ.55 கோடியிலும் இரண்டு மேம்பாலங்களை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி மக்கள் பயன்பாட்டிற்காக நாளை துவக்கி வைக்கிறார்.

இதையொட்டி, செங்கல்பட்டு மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் எம்.பியுமான சிட்லபாக்கம் ச.ராசேந்திரன், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், காஞ்சீபுரம் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் தலைவருமான திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் ஆகியோர் மேம்பாலங்களை பார்வையிட்டனர்.

அப்போது பரங்கிமலை ஒன்றிய கழக செயலாளர் என்.சி.கிருஷ்ணன், ஒன்றியக் கழக செயலாளர்கள் சிங்கபெருமாள் கோவில் எஸ்.கவுஸ்பாஷா, கஜா என்கிற கஜேந்திரன், மேலமையூர் இ.சம்பத்குமார், முன்னாள் எம்.எல்.ஏ.வும், அண்ணா தி.மு.க. மகளிரணி தலைவியுமான எஸ்.கணிதாசம்பத், முன்னாள் நகரமன்ற தலைவர் மறைமலைநகர் எம்.ஜி.கே.கோபிகண்ணன், நகரக் கழக செயலாளர்கள் வி.ஆர்.செந்தில்குமார், ரவிக்குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *