செய்திகள்

பல்லாவரம் முன்னாள் எம்.எல்.ஏ. தன்சிங் மகன் திருமண வரவேற்பு: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் வாழ்த்து

தாம்பரம், ஜூன்.18

பல்லாவரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ப.தன்சிங் மகன் திருமண வரவேற்பு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

பல்லாவரம் சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும், பல்லாவரம் நகர அண்ணா தி.மு.க. செயலாளருமான ப. தன்சிங் தனம் தன்சிங் ஆகியோரின் மகன் த. ஜெயசந்திரனுக்கும், காஞ்சிபுரம் முன்னாள் ஒன்றிய செயலாளரும், முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவருமான இ.சம்பத்குமார் மதுராந்தகம் சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும், காஞ்சிபுரம் முன்னாள் மகளிர் அணி செயலாளருமான ச. கணிதாசம்பத் ஆகியோரின் மகள் ச. ஜெயஸ்ரீக்கும் கடந்த 14ம் தேதி திருப்பதி திருமலையில் திருமணம் நடைபெற்றது.

இதனையடுத்து திருமண வரவேற்பு விழா சென்னையை அடுத்த பல்லாவரம் துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் உள்ள அருள்முருகன் டவர்ஸ் திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

வரவேற்பு விழாவில் முதலமைச்சரும், அண்ணா தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

அண்ணா தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, அமைச்சர்கள் திண்டுக்கல் சி. சீனிவாசன், செல்லூர் கே.ராஜூ, பி.தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, டி.ஜெயகுமார், கே.ஏ.செங்கோட்டையன், கே.பி.அன்பழகன், டாக்டர் வி. சரோஜா, டாக்டர் சி. விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், கே.டி. ராஜேந்திர பாலாஜி, கே.சி.வீரமணி, பி.பெஞ்சமின், வெல்லமண்டி என்.நடராஜன், சேவூர் எஸ். ராமச்சந்திரன் ஆகியோர் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார்கள்.

தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் பா.வளர்மதி, வைகைசெல்வன், ரமணா உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி.க்கள் கே.என். ராமச்சந்திரன், மரகதம் குமரவேல், காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட செயலாளரும், தென் சென்னை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிட்லபாக்கம் ச. ராசேந்திரன், காஞ்சி மத்திய மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ். ஆறுமுகம், மேற்கு மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் பா. கணேசன், அவைத் தலைவர் ம. தனபால், முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி. கந்தன், பரங்கிமலை ஒன்றிய செயலாளர் என்.சி.கிருஷ்ணன், மாவட்ட துணைச் செயலாளர் அம்மன் பி. வைரமுத்து, பொதுக்குழு உறுப்பினர்கள் வெ. பரணி பிரசாட், தா.மு. துரைவேல், பேரவை துணைச் செயலாளர் எ.ராஜசேகர், இணை செயலாளர்கள் இரா. மோகன், கோவிலம்பாக்கம் சி. மணிமாறன், லியோ என். சுந்தரம், தாம்பரம் நகர செயலாளர் எம்.கூத்தன், மாவட்ட பிரதிநிதி பி.கே.பரசுராமன், பம்மல் நகர கழக பொருளாளரும், பம்மல் முன்னாள் நகர மன்ற துணைத் தலைவைருமான பா. அப்பு வெங்கடேசன், காஞ்சி கிழக்கு மாவட்ட பாசறை தலைவர் கே.சி. வினோத் குமார், பல்லாவரம் நகர பாசறை செயலாளர் பல்லாவரம் எம்.ஏ. சத்தியசீலன், பல்லாவரம் நகர மன்ற முன்னாள் உறுப்பினர்கள் வி. மனோகரன், எம். ஞானசேகரன், கே.விஸ்வநாதன், அ.கிருஷ்ணமூர்த்தி, அருணாசலம், அம்மனி கல்யாணசுந்தரம், காஞ்சி கிழக்கு மாவட்ட மாணவரணி இணை செயலாளர் ஞா. சந்திரசேகர் ராஜா, ஏ. பத்மநாபன், ஆவின் ஆர். செல்வராஜ், கௌதம் உள்ளிட்டோர் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார்கள்.

நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் அனைத்துகட்சி பிரமுகர்கள், அதிகாரிகள், தொழில் அதிபர்கள் என ஏராளமானபேர் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார்கள்.

இந்தத் திருமண வரவேற்பு விழாவிற்கான ஏற்பாடுகளைப் பல்லாவரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தன்சிங் தலைமையில் நகர மன்ற முன்னாள் துணை தலைவர் த. ஜெயபிரகாஷ் சிறப்பான முறையில் செய்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *