சென்னை, செப். 5–
தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்களில் காலியாக இருக்கும் துணைவேந்தர் பணியிட நியமனம் தொடர்பாக, ஆளுநருக்கு தமிழ்நாடு அரசு எழுதியுள்ள பதிலில், யுஜிசி விதிகளை மட்டும் பின்பற்றினால் போதும், புதிதாக உறுப்பினர்களை சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் காலியாக உள்ள 3 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமனமிப்பது தொடர்பான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால், துணைவேந்தர் தேடுதல் குழுவில், யுஜிசி குழு பிரதிநிதியை உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்ற ஆளுநர் ஆர்.என். ரவியின் நிபந்தனையால் துணைவேந்தர் நியமனத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
ஆளுநருக்கு பதில் கடிதம்
இது குறித்து தமிழ்நாடு அரசுக்கு ஆளுநர் அனுப்பிய கடிதத்தை பரிசீலித்த அரசு, ஆளுநரின் கோரிக்கைய ஏற்க முடியாது என்றும், யுஜிசி விதிகளை மட்டும் பின்பற்றினால் போதும். புதிதாக உறுப்பினர்களை சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை என்று, பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் தொடர்பாக, ஆளுநர் ஆர்.என். ரவிக்கு தமிழ்நாடு அரசு எழுதியிருக்கும் பதில் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.