சிறுகதை

பலே திருட்டு – ராஜா செல்லமுத்து

அன்று இரவு சென்னையில் இருந்து கோவைக்கு கிளம்பியது ஒரு அரசுப் பேருந்து.

அன்று என்னவோ தெரியவில்லை பேருந்தில் பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அடித்து பிடித்து இருக்கைகளை பிடித்த பெண்கள் மூன்று பேர் அமரும் இருக்கையில் பெண்களும் அதற்கு பின்னால் பெண்களும் என்று நிறைய இருக்கைகளை பெண்கள் ஆக்கிரமித்து இருந்தார்கள்.

அதில் ரோஸ்லின் ,வேணி, கிளாரா என்று பெண்கள் பேருந்தில் பயணம் செய்யும் பெண்களுடன் ரொம்பவும் அன்பாகவும் அனுசரித்தும் பேசினார்கள்.

ஆனால் இந்த மூவருக்கும் பேருந்தில் பயணம் செய்த பெண்களுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை தான் .

ஆனால் அவர்கள் அவ்வளவு அன்பாக பேசியது பேருந்தில் பயணம் செய்த மற்ற பெண்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது .

முன்னாடி எல்லாம் பஸ்ல உட்கார்ந்து பக்கத்தில் உட்கார்ந்து இருக்கிறவங்க கிட்ட கூட ஒரு வார்த்தை பேச மாட்டாங்க .இப்ப இருக்குற ஜெனரேஷன் அப்படி இல்லை .எல்லாரும் ரொம்ப நல்லா பேசுறாங்க .இப்படித்தான் இருக்கணும் என்று ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொண்டார்கள்.

சுமார் இரவு 9 மணிக்கு எல்லாம் சென்னை நகரை விட்டு வெளியேறியது அந்த அரசுப் பேருந்து. 9 .10 என்று இரவு நேரம் கடந்து கொண்டிருந்தது .பேருந்தில் இருந்த விளக்குகள் எல்லாம் அணைக்கப்பட்டு விட்டன. மேல்மருவத்தூர், திண்டிவனம் செல்வதற்குள் அத்தனை பேரும் அயர்ந்து தூங்கிவிட்டார்கள்.

விழுப்புரத்திற்கு முன்னால் சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு செல்லலாம் என்று பேருந்து சாலையில் இருக்கும் ஹோட்டலில் நிறுத்தினார் ஓட்டுநர் அணைக்கப்பட்ட விளக்குகள் எல்லாம் விழித்துக் கொண்டன.

அப்போது பேருந்து நிலைய கிளாரா, வேணி, ராேஸ்லின், இவர்களை எல்லாம் காணவில்லை அன்பாக பேசிவிட்டு எப்போது பேருந்து விட்டு இறங்கினார்கள் என்பது அந்த பெண்களுக்கு மிகவும் குழப்பமாக இருந்தது.

சரி ஏதாவது உங்களுக்கு வேலையா இருக்கும் என்று நினைத்துக் கொண்டு பேருந்தில் பயணித்த பெண்கள் தங்கள் தலையின் பின்னால் தடவி பார்த்த போது ஓவென்று அழுதார்கள். அவர்களின் ஒட்டுமொத்த முடியும் அடியோடு வெட்டப்பட்டு திருடப்பட்டு இருந்தது.

மூன்று பேர் அமரும் இருக்கையில் அதற்கு பின்னல் மூன்று பேர் அதற்கு பின்னால் இருந்த மூன்று பேர் இருக்கையில் அதற்கு பின்னால் மூன்று பேர் என்று கிளாரா, வேணி, ரோஸ்லின் நண்பர்கள் மூன்று பெண்களுக்கு பின்னால் அமர்ந்து நூதன முறையில் பெண்களின் கூந்தலை கத்தரித்து விட்டுச் சென்று இருக்கிறார்கள் என்பது தெரிந்தது.

இது என்ன புது திருட்டா இருக்கு என்று பேருந்தில் இருந்தவர்கள் பேசிக் கொண்ட போது அங்கே பெண்களின் அழுகைக் குரல் ரொம்பவே அதிகமாகக் கேட்டது.

இப்போ நீளமான கூந்தலுக்கு விலை அதிகம் ஐம்பதாயிரம் ஒரு லட்சம் இப்படி முடிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்றாங்க . இது பெரிய குற்றமில்லை அப்படின்னு திருட உங்களுக்கு தெரியும். ஆனா இப்படி 10, 15 இடத்திலும் கைவரிசை காட்டுனா பல லட்சங்களுக்கு அவங்க இந்த முடிய விற்பனை செய்ய முடியும். அதனால நாம முன்ன பின்ன தெரியாதவங்க கூட ரொம்ப பேச்சுவார்த்தை வைக்கக் கூடாது. அதுவும் இரவு நேரங்களில் அறவே கூடாது. இப்ப பாருங்க என்ன ஆச்சுன்னா நீங்க கஷ்டப்பட்டு வளர்த்த முடியும் இப்படி ஆயிடுச்சு. இனி என்னைக்கு உங்களுக்கு நீளமான முடி வளர்றது ?என்று வருத்தப்பட்டு சொன்னார்கள் பேருந்தில் இருந்த சில ஆண்கள் பெண்கள்.

ஆண்கள் போல் கிராப் வெட்டிய தலை போல இருக்கும் முடியை பார்த்த முடியை இழந்த பெண்களுக்கு அது அவமானமாக இருந்தது.

ஓ என்று அழுது கொண்டிருந்தார்களே ஒழிய அவர்கள் அழுகை அடங்கிய பாடில்லை கிளாரா, ரோஸ்லின், வேணி மற்றும் முடி திருடி நம்பிகள் பெரிய பைகளில் வெட்டிய முடியை அடைத்து கொண்டு லட்ச ரூபாய்க்கு பாேகும் போல அவ்வளவு முடி இருக்கு என்று பெருமிதத்தோடு இன்னொரு பேருந்து நோக்கி பயணப்பட்டார்கள்.

அவர்கள் ஏற்கனவே வெட்டி வைத்திருந்த அந்த கூந்தல் இன்னொரு பெண் மூலமாக விற்பனைக்கு சென்றது.

கிளாரா, வேணி, ராேஸ் லின் இன்னும் ஒரு சில பெண்கள் அடுத்த வேட்டைக்கு இன்னொரு பேருந்தை எதிர்நோக்கிக் காத்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published.