அப்பா மதியழகன் சட்டையில் 1300 ரூபாயை எண்ணிவைத்தார்.
ஏதோ யோசனையில் ‘விமலா, போய்க் குளிக்கிறேன். பாத்ரூம் கதவில் டவலப் போடு ‘சரிப்பா, என்றாள் மகள் விமலா .
குளித்து முடித்துவிட்டு டிபன் சாப்பிட்டுவிட்டு,
‘அம்மா விமலா பூஜை ரூமில் இருக்கும் திருநீரை எடுத்து வா’’என்றார். எடுத்துவந்தாள். . திருநீரு எடுத்து பூசிக்கொண்டார்.
‘சரி நான் நம் வெல்ல மண்டிக் கடைக்குச் செல்ல வேண்டும். எங்க பாஸ்கரன்,
டேய் சாப்பிட்டாச்சா
ஆமாம்பா சரி நீ மண்டிக்குப் போ’.
சட்டையைப் போடச் சென்றார்.
வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு சட்டை பொத்தானை போட்டுக்கொண்டு சட்டைப் பையில் இருக்கும் 1300 ரூபாயை துழாவினார்.
சட்டைப்பையில் 1000 ரூபாய்தான் இருந்தது. என்ன 1300 வைத்திருந்தோம்; 1000 உள்ளது.
யோசனை செய்ய, அந்த மணி, 1000ந்தான் கொடுத்தாருபோல…,
சரி என மண்டிக்கு சென்றுவிட்டார்.
மதியழகன் மண்டியில் என்னடா பாஸ்கர், 25000 ரூபாய் இருந்தது. இப்ப என்னடா 5000 ரூபா குறைந்துள்ளது. இல்லப்பா 5000 அந்த வெல்ல மண்டி தியாகு, குடோனில் இருக்கும் தினேஷ், ஏதோ நீங்கள் தர வேண்டுமென சொன்னான் கொடுத்தேன். யோசிச்சு யோசிச்சு பார்த்தார்.
சரி, இருக்கும் என நீ போய் ஏதோ சுற்றுலாவுக்கு செல்ல வேண்டும் என கூறினான். இந்தா 3000 ரூபா, அப்படியே எனக்கு 1000 ரூபாய்க்கு நல்ல 2 புத்தகம் வாங்கி வா. நல்ல எழுத்தாளர்கள் எழுதிய புத்தகம் வாங்கி வா.
சரிப்பா,
தமிழ் மேல் ஆர்வம் கொண்டவர் அப்பா.
வீட்டுக்கு வந்தார். அப்பா மதியழகனிடம் அவர் மனைவி மளிகைப் பொருட்கள் வாங்க வேண்டுமென 3000ரூபா கொடுத்தார். அவர் மளிகைப் பொருட்கள் 2700க்கு வாங்கிவிட்டு மீதிப் பணம் கொடுக்கவில்லை. மனைவி மேல் சந்தேகப் பட்டார். விட்டு விட்டார்.
மகள் ‘‘அப்பா…’’
என்னம்மா
உங்கள் சட்டையில் 750 ரூபா எடுத்தேன்.
என்ன கேட்காமல் ஏன் எடுத்தாய்.
அதில் 250 ரூபா செலவு. இந்தாப்பா பால்கார் உனக்கு தர வேண்டிய 250 ரூபா.
எங்க அந்த 750 ரூபா
‘அப்பா பால்காரருக்கு கொடுத்தேன். இந்தாங்க 500 ரூபா,
இந்த வேலையெல்லாம் வேண்டாம். ஆளுக்கு ஆள் பணம் கொள்ளை போய்க்கொண்டே இருக்கிறது.
இப்படி இருந்தால் வெல்ல மண்டியை மூட வேண்டியது தான்.
மகன் மதியழகன் சுற்றுலா முடித்து வந்தான்.
எங்கடா புத்தகம்
இல்லப்பா புக் வரவில்லை. புக் வரவில்லையா? நீ எடுத்துக் கொண்டாயா?
பேந்த பேந்த முழித்தான். கோட்டானைப் போல, சரி என இரவு கழிந்தது.
அப்பா ரூமில் மீண்டும் பணம் 3000 ரூபா எடுத்திருந்த பாஸ்கர் திரும்பி திரும்பி இப்படி அப்படி பார்த்து கையை விட்டான்.
பாஸ்கர் கையை பிடித்து விட்டார் அப்பா மதியழகன் ; பல நாள் திருடன் ஒரு நாள் அகப்பட்டுவிட்டான்.
![]()





