சென்னை, ஜூன் 25–-
பறவை இனங்களை பாதுகாக்க மாநில பறவை ஆணையம் அமைப்பதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-–
பறவை இனங்களை பாதுகாப்பதை பலப்படுத்துவதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, மாநில பறவை ஆணையத்தை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதன் தலைவராக இருப்பார். வருவாய் நிர்வாக ஆணையரின் பிரதிநிதி, ஊரக மேம்பாடு மற்றும் ஊராட்சி ஆணையரின் பிரதிநிதி, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (வனப்படைகள் தலைவர்), பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை தலைமை பொறியாளர், தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழக இயக்குனர், கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (புலிகள் திட்டம்), கூடுதல் முதன்மை தலைமை பாதுகாவலர் (வன விலங்குகள்) ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள். முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வார்டன் உறுப்பினர் செயலாளராக இருப்பார். இந்த ஆணையத்துக்கு பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.