செய்திகள்

பரூக் அப்துல்லாவுக்கு கொரோனா தொற்று

ஸ்ரீநகர், மார்ச் 30–

காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்களவை உறுப்பினருமான ஃபரூக் அப்துல்லாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை ஃபரூக் அப்துல்லாவின் மகன் உமர் அப்துல்லா உறுதி செய்துள்ளார்.

எனது தந்தைக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதால், அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், எனது தந்தைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நானும் எனது குடும்பத்தாரும் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோம். மேலும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று உமர் அப்துல்லா வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *