ராமநாதன் தன் அலுவலகத்தில் அலுவலகத்திற்கு வேலை செய்யும் ஆள் வேண்டுமென்று எத்தனையோ பேரை வரவழைத்தார். ஆனால் அவருக்கு பிடித்த மாதிரி ஆள் ஒருவர்கூட வரவில்லை .
ஏனென்றால் அலுவலகத்தை காலையில் திறப்பது முதல் அலுவலகம் முடிந்து மாலை அலுவலகத்தை மூடும் வரை அத்தனை வேலைகளையும் அலுவலக ஊழியர் செய்ய வேண்டும் என்பதால் அந்த வேலைக்கு ஒரு பொறுப்பான ஆள் வேண்டும் என்று எவ்வளவு நாட்கள் தேடிப்பார்த்தும் ராமநாதனுக்கு ஒருவர் கூட அப்படி ஒரு ஆள் அமையவில்லை.
ராமநாதன், நண்பர் பழனிசாமி இடமும் இந்த விஷயத்தை சொல்லி வைத்தார்
பழனிசாமி இரண்டொரு நாட்களில் நல்ல ஒரு பணியாளை அனுப்புவதாக ராமநாதனிடம் சொன்னார்.
அவர் சொன்னது போலவே இரண்டொரு நாளில் ஒரு பணியாளரை ராமநாதன் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தார்.
ராமநாதனின் அலுவலகத்திற்கு வந்த பணியாளைப் பார்த்தவர்
தம்பி உங்க பேர் என்ன? என்று அந்தப் பணியாளிடம் கேட்டார்.
தன்னுடைய பெயர் ராஜேஷ் என்று சொன்னார் ராஜேஷ் .
பழனிசாமி எல்லாம் உங்க கிட்ட சொல்லி இருப்பார் என நினைக்கிறேன். அதனால நாளையிலிருந்து இங்கே அலுவலகத்திற்கு வரலாம். காலையில அலுவலகத்தை திறக்கிறது கடைசியா அலுவலகத்தை மூடுவது எல்லாமே நீங்க தான். இந்த அலுவலகத்தில் இருக்கிற மொத்த சொத்துக்கும் நீங்க தான் பொறுப்பு. நான் எவ்வளவோ ஆட்களை பார்த்தேன். ஆனா ஒருத்தரும் எனக்கு சரியா வரல; நீங்க வாங்க வீட்டுக்கு; வந்து அலுவலக சாவிய வாங்கிட்டு போய் காலைல திறந்து வையுங்கள். அதுக்கப்புறமா உங்கள வேலையில வைத்துக்கொள்வதா? இல்லையா அப்படின்னு நான் வந்து சொல்றேன் என்று ராஜேஷிடம் சொன்னார்.
ஓகே சார், நான் காலையில வீட்டுக்கு வர்றேன் என்று சொன்ன ராஜேஷ் சொன்னபடியே, மறுநாள் காலை வீட்டிற்கு சென்றான்.
ராமநாதன் வீட்டுக்கு சென்றவன் ராஜேஷிடம் அலுவலக சாவியைக் கொடுத்து ஆபீஸில் ஆபீசை திறந்து வையுங்கள்; நான் வருகிறேன் ; வேலையாட்களும் வருவார்கள் என்று சொல்லி அனுப்பினார் ராமநாாதன்.
ராஜேஷ் அலுவலகம் வந்தான். அலுவலகத்தை திறந்தான். அவனுக்கு அந்த அலுவலகம் புதிதாக தெரிந்தது.
பத்து மணிக்கெல்லாம் மற்ற பணியாளர்களும் வந்து சேர்ந்தார்கள். ராமநாதனும் அலுவலகத்திற்கு வந்தார்
அலுவலகம் தூய்மையாக இருந்தது. அவர் எதிர்பார்த்தபடியே அத்தனையும் அலுவலகத்திலிருந்து முக்கியமான ஒரு பரிசோதனையும் அதிலும் ராஜேஷ் வெற்றி அடைந்திருந்தான்.
இதை பார்த்த ராமநாதன் முதலில் ராஜேஷ் அனுப்பிய பழனிசாமிக்கு தான் நன்றி சொன்னார்.
பழனிசாமி ரொம்ப நன்றி. நல்ல பொறுப்பான ஆளத்தான் வேலைக்கு அனுப்பி இருக்கீங்க. நான் என்ன நினைத்தேனோ அப்படியே இருக்கான். இதுக்கு முன்ன நான் பார்த்த எந்த ஆளும் எனக்கு பிடிக்கல. ஆனா ராஜேஷ் அப்படி இல்ல. நான் வச்ச பரிசோதனையில் ஜெய்ச்சுட்டான் என்று ராமனாதன் சொன்ன போது அப்படி என்ன பரிசோதனை? என்று பழனிசாமி கேட்டார்
அது ஒன்னும் பெருசா இல்ல என்னோட அலுவலகத்துல கோடிக்கணக்கான பணம் இருக்கும். பணம் இருக்கிற இந்த இடத்தில அலுவலகத்துக்கு வர்ற ஆள் ரொம்ப நேர்மையானவரா இருக்கிறாரா? இல்ல அவர் வேறு எப்படிப்பட்ட ஆளுன்னு தெரிந்து கொள்வதற்காக ஒரு பரிசோதன வைப்பேன். அதுல நீ அனுப்புன ராஜேஷ் ஜெய்ச்சுட்டான் என்று சொன்னார் ராமநாதன்.
அப்படி என்ன டெஸ்ட் வச்சீங்க சொல்லுங்க என்று ஆர்வம் மேலிட பழனிசாமி கேட்டார்.
வேற ஒன்னும் இல்ல, நான் அலுவலக சாவியை கொடுத்து அனுப்பும்போது அலுவலகத்துக்கு உள்ள ஒரு அஞ்சு ரூபா காயின்
போட்டிருப்பேன். இதுக்கு முன்னாடி வந்த எல்லாருமே அந்த ஐந்து ரூபாயை எடுத்து பாக்கெட்ல போட்டுக்கிட்டு இதென்ன சின்ன விஷயம் தானே இதெல்லாம் முதலாளிக்கு தெரியவா போகுது என்று யாரும் என்னிடம் அதை சொல்லவில்லை .
ஆனா நீ அனுப்புன ரஜேஷ் அந்த அஞ்சு ரூபாய் எடுத்து என் ஒரு டேபிள்ல வச்சிருந்தான்.
நான் தம்பி , இந்த அஞ்சு ரூபா, எங்க இருந்தது, அப்படின்னு கேட்டதும் சார் கதவு திறக்கும் போது கதவுக்கு முன்னாடி கிடந்தது சார் அப்படின்னு பதில் சொன்னான்.
அந்த நேர்மை தான் எனக்கு பிடித்திருந்தது. அஞ்சு ரூபா கூட அடுத்தவர்களுடைய பணம் ஒரு அலுவலகத்தில் இருக்கு, அதை கொடுத்திரணும் அப்படிங்கிற அந்த நேர்மைதான் ராஜேஷ எனக்கு பிடித்திருந்தது. அதனாலதான் அந்த தம்பிய நான் செலக்ட் பண்ணி இருக்கேன் .
ஏன்னா நாளைக்கு பெரிய பெரிய தொகை இருக்கும். பணம் இருக்கும். இந்த அஞ்சு ரூபாய்க்கு ஆசைப்படாத இந்த பையன், நிச்சயமா எத்தனை கோடி கொடுத்தாலும் அதுக்கு ஆசைப்பமாட்டான்னு எனக்கு தெரியுது. அதனால ராஜேஸ் இனிமேல் என்னுடைய அலுவலகத்துக்கு வேணும் என்று ராமநாதன் சொன்னபொழுது,
தான் அனுப்பிய பையன் நல்ல பெயர் எடுத்திருப்பதில் பழனிசாமி தனக்குத் தானே பெருமைப் பட்டுக் கொண்டார்.