செய்திகள்

பராமரிப்பு பணி: மதுரை – எழும்பூர் ரெயில் சேவையில் மாற்றம்

சென்னை, அக்.12-

பராமரிப்பு பணி காரணமாக மதுரை–எழும்பூர் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னை சென்டிரல்–கூடூர், சென்னை எழும்பூர்–விழுப்புரம் பிரிவில் பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

* மதுரை–எழும்பூர் அதிவேக சிறப்பு ரெயில் (02636), வரும் 20, 27ந்தேதிகளில் விழுப்புரம்–எழும்பூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதைப்போல் எழும்பூர்–மதுரை அதிவேக சிறப்பு ரெயில் (02635), வரும் நவம்பர் மாதம் 10ந்தேதி எழும்பூர்–செங்கல்பட்டு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

* எழும்பூர்–காரைக்குடி அதிவேக சிறப்பு ரெயில் (02605), வரும் 20, 27-ந்தேதிகளில் எழும்பூர்–விழுப்புரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதைப்போல் காரைக்குடி–எழும்பூர் அதிவேக சிறப்பு ரெயில் (02606), வரும் நவம்பர் மாதம் 10ந்தேதி செங்கல்பட்டு–எழும்பூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

* விஜயவாடா–சென்டிரல் பினாகி அதிவேக சிறப்பு ரெயில் (வண்டி எண்:02711), வரும் 19, 26ந்தேதிகளில் கூடூர்–சென்டிரல் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதைப்போல் சென்டிரல் – விஜயவாடா பினாகி சிறப்பு ரெயில் (02712), வரும் 19, 26-ந்தேதிகளில் சென்டிரல்–கூடூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *