செய்திகள்

பரபரப்பான விமான நிலையம்: உலகில் 2 வது இடத்தில் டெல்லி அமெரிக்கா முதலிடம், துபாய் மூன்றாமிடம்

சென்னை, மே 4–

உலகிலேயே பரபரப்பாக இயங்கும் விமான நிலையங்கள் பட்டியலில் டெல்லி விமான நிலையம் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

கடந்த மார்ச் மாதத்தில், உலக அளவில் பரபரப்பாக இயங்கிய விமான நிலையங்கள் பட்டியலை, சர்வதேச பயண விவரங்களை அளிக்கும் ஓஏஜி என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. உள்நாட்டு, சர்வதேச விமானங்களை கையாண்ட வகையில் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

துபாய் 3 வது இடம்

அதில், அமெரிக்காவின் அட்லாண்டா விமான நிலையம் 44 லட்சத்து 20,000 இருக்கைகளை கையாண்டு உலக அளவில் முதலிடத்தை தக்க வைத்துள்ளது. டெல்லி விமான நிலையம் 36 லட்சத்து 10,000 இருக்கைகளை கையாண்டு, இரண்டாம் இடத்துக்கு முன்னேறி உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் டெல்லி மூன்றாம் இடத்தில் இருந்தது. துபாய் விமான நிலையம், 35 லட்சத்து 50,000 இருக்கைகளை கையாண்டு தற்போது மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.