சிறுகதை

பயம் – ராஜா செல்லமுத்து

கந்தையா தேங்காய் திருடுவதில் மன்னன் .

எவ்வளவு பெரிய தென்னை மரமாக இருந்தாலும், உயரம் என்று பார்க்காமல் கூட சரசரவென்று ஏறி தேங்காயைப் பறித்து வந்து ஆள் அரவம் இல்லாமல் அத்தனையும் விற்று பணமாக்கி விடுவான்.

அவ்வளவு தைரியம் .அவ்வளவு நுணுக்கமானவன் . திருடுவதில் கை தேர்ந்தவன். அவன் எப்படி திருடினான்? என்பது அவனுக்கு மட்டும்தான் தெரியும். தென்னை மரத்துக்காரர்களும் தன் தோட்டத்துகாரர்களும் திருடன் என்று அவனை கண்டுபிடிக்க முடியாது.

அவ்வளவு லாவகமாக தேங்காய் திருடி விடுவான். இரவு என்பது அவனுக்கு அவ்வளவு சர்வ சாதாரணம். எப்போது எங்கே இந்த மரத்தில் இருக்கிறான் என்பது அவனுக்கு மட்டும்தான் தெரியும்.

இப்படி போய்க் கொண்டிருக்கும் அவனது திருட்டு வாழ்க்கையில் ரங்கசாமி வீட்டு தென்னந் தோப்பில் ஒரு மரத்தில் குலைகுலையாக காய்த்து தொங்கியது . அதைப் பார்த்து கொண்டவன் இன்று இந்த தென்னைமரம் தான் நமக்கு வேட்டை என்று மனதில் குறித்துக் கொண்டான்

அதுபோலவே அன்று இரவு அந்த மரத்தில் ஏறி கொலை கொலையாக இருக்கும் அத்தனை காய்களையும் வெட்டி கீழே இறங்கினான். இது யாருக்கும் தெரியாது; . தேங்காய்களை உரித்து தேங்காயை எடுத்துக் கொண்டு போனான். அதை விற்பனையும் செய்தும் விட்டான்.

வாரம் ஒன்று கடந்தது .

ரங்கசாமி தென்னை மரத்தில் தேங்காய் பறிபோனது நினைத்து குய்யோ முறையோ என்று கத்தினார்

ஆனால் அதற்கான அடையாளம் கண்டு பிடிக்கவே முடியவில்லை. என்றாலும் சாட்சி இல்லாமல் எப்படி எவனைக் கேட்பது என்று வருந்தினார்.

வாரம் ஒன்று கடந்தது. கந்தையா குடிப்பழக்கம் இருப்பதனால் அந்த குடிபோதையில் ரங்கசாமி வீட்டு மரத்தில் தேங்காய் திருடியது பற்றி நண்பரிடம் சொல்லி சிரித்துக் கொண்டிருந்தான்.

அந்த மரத்தில் மட்டும் குலைகுலையாக தேங்காய் காய்த்திருந்ததை இரவில் அதை எப்படி லாவகமாகத் திருடினான் என்பதையும் சொன்னான்.

அதை கேட்டுக் கொண்டிருந்த நண்பன்….

ஐயையோ அந்த மரத்திலயா ஏறி தேங்காய் பறித்தாய்? என்று சொன்னார்.

ஏன் என்று கந்தையா கேட்டான்.

அந்த மரத்துல அடைப்பாம்பு ஒன்று இருந்தது. அதனால தான் அந்த மரத்தில் ஏறாமல் இருந்தார்கள் .கீழே விழும்போது மட்டும்தான் காயை எடுத்துக் கொண்டிருந்தார்கள்

அந்த மரத்தில் போய் எப்படி பிடுங்கினாய் என்று நண்பன் கேட்டதும்

என்னது அடபாம்பா? என்று கீழே விழுந்து மூச்சுத் திணறி போனான்.

அவனை உடனடியாக மருத்துவிடம் கூட்டிப் போனார்கள் .பரிசோதனை செய்த டாக்டர்கள். அவர் இறந்துவிட்டதாக சான்றிதழ் கொடுத்தார்

எப்படி இறந்தார் ?என்று கேட்டபோது

ஒரு வாரத்திற்கு முன்பு ஒரு தென்னை மரத்தில் தேங்காய் பறித்திருக்கிறான். அதை எங்களிடம் சொல்லிக் கொண்டிருந்தான் . அந்த தென்னை மரத்தில் அடைப்பாம்பு இருக்கிறது என்று தான் சொன்னோம். உடனே மயங்கி விழுந்தவன் இறந்துவிட்டான் என்றும் கூறினார்கள் நண்பர்கள்

இதைக் கேட்ட மருத்துவர் பதில் சொன்னார்:

ஒரு மனிதனுக்கு பயம் தான் முதல் எதிரி. பாம்பு கடித்திருந்தால் அவன் ஒரு மணி நேரத்தில் அவன் உயிர் போய்விடும். ஆனால், ஒரு வாரம் கழித்து அந்த மரத்தில் பாம்பு இருக்கிறது என்று நீங்கள் சொல்லியதும் தான் அந்த பயத்தில் அவன் இறந்திருக்கிறான்.

பாம்பை விட பயம் தான் அவனைக் கொன்று இருக்கிறது. அதனால் மனிதர்களுக்கு பயத்தை உருவாக்கும். எந்த செயலையும் செய்யாதீர்கள். தைரியத்தை மட்டும் கொடுங்கள். அப்படியே பாம்பு கடித்திருந்தாலும் அவன் புத்தியில் அது ஏறவில்லை. ஒருவாரம் இருந்திருக்கிறான்.

நீங்கள் செய்த காரியம் தான் அவனுக்கு மரணத்தைக் கொண்டுவந்து விட்டது.

இனி வரும் நாட்களில் எந்த ஒரு மனிதனுக்கும் பயத்தை ஏற்படுத்தாதீர்கள். அது தான் உங்களுக்கு முதல் எதிரி என்று சொல்லி அனுப்பினார் மருத்துவர். அத்தனை நண்பர்களும் வாயடைத்துப் போய் மருத்துவமனையை விட்டு வெளியேறினார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *