அகமதாபாத், ஜூன் 13–
விமானத்தில் உள்ள பல்வேறு கோளாறுகள் குறித்து பயணி ஒருவர் வீடியோ வெளியிட்டு எச்சரித்த நிலையில், அதனை புறக்கணித்ததே விமான விபத்துக்கு காரணமா என கேள்விகள் எழுந்துள்ளது.
அகமதாபாத்தில் இருந்து புறப்பட்டு லண்டன் காட்விக் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. இதில் 241 பேர் உயிரிழந்தனர். இது போயிங் 787 வகை விமானத்தில் ஏற்பட்ட முதல் உயிரிழப்பு விபத்தாகும்.
இந்த பயணத்திற்கு முன்பாகவே, டெல்லியில் இருந்து அகமதாபாத் வரை பயணித்த அகாஷ் வத்ஸா என்ற பயணி, விமானத்தில் ஏற்பட்ட பல தொழில்நுட்ப கோளாறுகளை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் பகிர்ந்திருந்தார்.
அதில், குளிரூட்டும் வசதி செயலிழந்தது, கேபின் குழுவை அழைக்கும் பொத்தான்கள் வேலை செய்யவில்லை, பொழுதுபோக்கு வசதிகள் செயலிழந்தன என்பதுடன், விமானத்தின் உள்ளே அதிக வெப்பம் இருந்ததாகவும் அவர் கூறியிருந்தார். இந்த வீடியோ தற்போது பரபரப்பை ஏற்படுத்தி, விமான பராமரிப்பு தரம் குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது.
விசாரணைக்கு ஆதாரம்
விபத்துக்குப் பிறகு, விமானத்தின் பிளாக் பாக்ஸ் மற்றும் குரல் பதிவுகள் மீட்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன. இந்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் (DGCA), ஏர் இந்தியா, போயிங் மற்றும் பிரிட்டனின் விமான விபத்து விசாரணை குழுவினர் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின் கோளாறுகள், இறக்கைகள் அல்லது லேண்டிங் கியர் செயலிழப்பு, பைலட் தவறு அல்லது அதிக வெப்பம் போன்ற வெளிப்புற காரணிகள் முன்னதாகவே, பயணியொருவரால் விமானத்தின் கோளாறுகள் பலவும் எச்சரிக்கப்பட்ட நிலையில், விசாரணையின் முக்கிய அம்சமாக இது பார்க்கப்படுகிறது
இந்த சம்பவம், விமான பராமரிப்பு தரம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து உலகளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
![]()





