செய்திகள்

பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு: மணிப்பூரில் 5 பேர் பலி

இம்பால், அக். 13–

மணிப்பூர் மாநிலத்தின் கங்க்போக்பியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

மணிப்பூரின் கங்க்போக்பியில் உள்ள கம்னான் கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட 2 தீவிரவாதிகளின் இறுதிச் சடங்கு நேற்று நடைபெற்றது. இதில் அப்பகுதி மக்கள் சிலர் கலந்து கொண்டனர்.

5 பேர் சுட்டுக்கொலை

அப்போது எதிர்பாராத விதமாக அக்கூட்டதில் புகுந்த குகி பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார்கள். இறந்தவர்களில் 3 பேரின் உடலை மீட்டிருப்பதாகவும் 2 பேரின் உடலைத் தேடி வருவதாகவும் இத்தாக்குதலில் ஈடுபட்ட குகி பயங்கரவாதிகள் விரைவில் பிடிபடுவார்கள் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

முன்னதாக மணிப்பூரின் ஹிங்கொஜங் மாவட்டத்தில் கடந்த அக்-10 ஆம் தேதி பாதுகாப்பு படையினர் நடத்திய சோதனையில் குகி பயங்கரவாதிகள் 4 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *