கொல்கத்தா, ஏப்.15–
‘பயங்கரவாத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் வகையில், மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசு செயல்பட்டு வருகிறது’ என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அனுராக் தாக்கூர் கூறியிருப்பதாவது:
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பணவீக்கம் 13 சதவீதம் இருந்தது. தற்போது உலகின் பல பகுதிகளில் போர் நடந்து வருகிறது. உலகத்துடன் ஒப்பிடும் போது, இந்தியாவில் பணவீக்க விகிதம் மிகவும் கட்டுக்குள் உள்ளது. கடந்த ஆண்டில், சுமார் 1.5 கோடி பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது.
காங்கிரஸ் ஆட்சியில் இருந்தால் சந்திரயான் 3 திட்டம் வெற்றி அடைந்து இருக்காது. ககன்யான் திட்டத்தைப் பற்றி காங்கிரஸ் சிந்தித்து இருக்காது. பயங்கரவாத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் வகையில், மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசு செயல்பட்டு வருகிறது. இதற்கு பல எடுத்துக்காட்டுகள் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.