செய்திகள்

‘பப்ஜி மொபைல் இந்தியா டூர்’ போட்டி துவங்கியது

Spread the love

கோவை, ஜூலை 5

இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பப்ஜி மொபைல் திறமைகளை கண்டறியும் நோக்கில் ஓப்போ வினால் ஸ்பான்ஸர் செய்யப்படும் பப்ஜி மொபைல் இந்தியா டூர், கடந்த 1ந் தேதி துவங்கியது.

இந்த நான்கு-மாத கால போட்டித்தொடர், நாட்டில் மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய மின்விளையாட்டுப் போட்டித் தொடராகத் திகழ்கிறது. ஆன்லைன் நிகழ்வுகளுடன், இந்தியாவின் நான்கு பகுதிகளில் நடைபெறும் பிராந்திய இறுதிச்சுற்றுகளைக் கொண்டுள்ள இந்த இந்தியா டூர் போட்டித் தொடர், நாட்டின் முதல் பல்-அடுக்குப் போட்டித் தொடராகத் திகழ்கிறது.

இதன் பிராந்திய இறுதிச்சுற்றுகள் ஜெய்ப்பூர், கௌஹாத்தி, புனா, விசாகப்பட்டிணம் ஆகிய நகரங்களிலும் மற்றும் இறுதிச்சுற்று கொல்கத்தாவில் அக்டோபர் மாதமும் நடைபெறவுள்ளது.

இந்த டூரானது, வீரர்கள் பீ தி புரோ வித் எப்11புரோ எனத் திகழ்வதை ஊக்குவிக்கிறது. பாரம்பரிய மொபைல் போன்களுடன் ஒப்பிடுகையில், இதன் 6.5 இன்சு டிஸ்பிளே திரை மற்றும் 90.9% வரையிலான ஸ்க்ரீன்-டு-பாடி விகிதம், பெரிய படங்கள் மற்றும் நிஜம் போன்ற கண்கவர் பொழுதுபோக்கு கேமிங் அனுபவத்தை வழங்குகிறது.

ஓப்போ பப்ஜி மொபைல் இந்தியா டூர், டயர் பிளாட்டினம் 5 அல்லது நிலை 20 – க்கும் மேற்பட்ட பப்ஜி மொபைல்கணக்கு கொண்ட அனைத்து இந்தியவாசிகளும் பங்கேற்கக்கூடியதாகும். நாடு முழுவதுமிருந்து பயணர்கள் நான்கு நகரங்களில் ஏதேனும் ஒன்றை போட்டித் தொடருக்காக பதிவு செய்கையில் தேர்ந்தெடுக்கலாம். ஒரு குழுவில் எத்தனை வீரர்கள் வேண்டுமானாலும் பதிவு செய்யலாம். எனினும், ஒரு பங்கேற்பாளரின் பதிவுகளின் எண்ணிக்கை ஒன்று மட்டுமே. இறுதியாக, பதிவு செய்யும் ஒரு அணியின் உறுப்பினர்கள் நாட்டின் எந்தவொரு நகரை அல்லது புவியியல் பகுதியை சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *