வாழ்வியல்

பதிவுத் துறையின் பணிகள் என்ன?–1

இங்கிலாந்து நாட்டில் சொத்துக்களை விற்பனை செய்ய, அறக்கட்டளை பதிவு செய்ய, பிறப்பு இறப்பு சான்றிதழ் வழங்க, அங்கங்களை/ ஒப்பந்தங்களை பதிவு செய்ய முதலில் பத்திரப்பதிவு முறை கொண்டு வந்தனர். பாராளுமன்றத்தில் இயற்றப்படும் சட்டங்கள், அரசின் பத்திரப் பதிவு நடைபெற்றது.

இந்தியாவுக்கான பல கூட்டங்கள் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் லண்டனில் நிறைவேற்றப்பட்டன. அவை இன்றளவும் நடைமுறையில் உள்ளன. சங்க பதிவு சட்டம் 1882 பார்ட்னர்ஷிப் சட்டம் 1882, என பல சட்டங்களை உதாரணமாக கூறலாம்.

இந்தியா சுதந்திரம் பெற்றது. இந்திய அரசு டெல்லியிலும், தமிழ்நாடு அரசு தமிழக சட்டமன்றத்தில் மேற்படி பதிவு சார் சட்டங்களில் பல திருத்தங்களை கொண்டு வந்தன. சங்க பதிவு சட்டம் திருத்தம் 1974, திருத்தச் சட்டம் 2016 என்று பல சட்டங்கள், ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. முதலில் கையில் எழுதி பதிவு செய்தனர். பின் டைப் செய்து வந்தனர். இப்போது கம்ப்யூட்டரில் டைப் செய்து இன்டர்நெட் மூலம் பதிவு செய்யலாம் என்னும் அளவுக்கு நிலைமை வந்துவிட்டது.

முன்பெல்லாம் வில்லங்க சான்று கேட்டால் ஆவணங்களை தேடிப்பார்த்து கையால் எழுதிக் கொடுத்து வந்தனர். பின்பு ஆவணங்களை, எண்களை எலக்ட்ரானிக் முறையில் டைப் செய்து வலைதளத்தில் பதிவு செய்தனர். அதன்பின் வில்லங்க சான்று கேட்டால் கம்ப்யூட்டர் உதவியுடன் உடனுக்குடன் பிரிண்ட் எடுத்து வில்லங்கச்சான்று கொடுத்து வந்தனர். பின் எந்த ஊரில் இருந்தும் வில்லங்கச்சான்று வாங்கும் வசதி வந்தது.

இப்போது ஆன்லைன் மூலம் பத்திரப்பதிவு செய்யும் நடைமுறையை தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ளது. தமிழ்நாட்டின் பதிவுத்துறையில் மின்னணு ஆளுமை முறைகளை கொண்டுவரும் இத்திட்டத்தின் மூலம் 575 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு தேவையான கணினி வசதிகளுடன் கூடிய 3 இணையதள தொடர்பு வசதிகள் கொடுக்கப்பட்டு மாநில தகவல் மையம் முனையில் உள்ள பேரிடர் மீட்பு தரவும் பயத்துடனும் இணைக்கப்பட்டுள்ளது.

பதிவுக்கு தாக்கல் செய்ய வேண்டிய ஆதாரங்களை முன்பே அனுப்பி சரிபார்க்கும் முறை முதல் ஒரே வருகையில் ஆவணங்களை பதிவு செய்து உடனுக்குடன் வழங்கும் வசதி வரை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் ஆவணப்பதிவு தொடர்பான எல்லா சேவைகளும் கம்ப்யூட்டர் வழியாக அவர்கள் இருப்பிடத்திலேயே வழங்கப்படுவதால் பொதுமக்கள் பதிவு துறை அலுவலகங்களுக்கு நேரடியாக செல்ல வேண்டியது வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *