செய்திகள்

பதவி உயர்வு பெறும் 30 ஐ.பி.எஸ். அதிகாரிகள்: தயாராகிறது அதிரடி டிரான்ஸ்பர் பட்டியல்

Makkal Kural Official

சென்னை, டிச. 3-–

தமிழக போலீஸ் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்ளிட்ட 3 கூடுதல் டிஜிபிக்கள், 7 ஐ.ஜி.க்கள், 3 டி.ஐ.ஜி.க்கள் உள்பட 30 ஐ .பி .எஸ் அதிகாரிகள் விரைவில் பதவி உயர்வு பெறவுள்ளனர்.

2026ம் ஆண்டுக்கான ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கான பட்டியல் தமிழக தலைமை செயலாளருக்கு டிஜிபி மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போது சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக உள்ள டேவிட்சன் தேவாசீர்வாதம், சைபர் க்ரைம் கூடுதல் டிஜிபி சந்தீப் மிட்டல், பொருளாதார குற்றப் பிரிவு கூடுதல் டிஜிபி பாலநாக தேவி ஆகியோர் டிஜிபிக்களாக பதவி உயர்வு பெறுகின்றனர்.

இதே போல சிபிசிஐடி ஐ.ஜி. அன்பு, தென் மண்டல ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்கா, சி.பி.ஐ.யில் உள்ள தீபக் தாமோர், மேற்கு மண்டல ஐ.ஜி. செந்தில்குமார், அனிஷா உசேன், நவீனமயமாக்கல் பிரிவு ஐ.ஜி. நஜ்மல் ஹோடா, ஐ.ஜி. மகேந்திர குமார் ரத்தோடு ஆகிய 7 ஐ.ஜி.க்கள் கூடுதல் டிஜிபிக்களாக அந்தஸ்து பெறுகின்றனர். மேலும் மத்திய அரசு பணியில் உள்ள டி.ஐ.ஜி.க்கள் ரம்யா பாரதி, பொன்னி, சோனல் மிஸ்ரா ஆகிய 3 பெண் டி.ஐ.ஜி.க்கள் ஐ.ஜி.யாக பதவி உயர்கின்றனர்.

மத்திய அரசு பணியில் உள்ள எஸ்பிக்கள் ஜார்ஜி ஜார்ஜ், கலைச்செல்வன், அருண் சக்திகுமார், அரவிந்த் மேனன் ஆகியோரும், தமிழக அரசு பணியில் உள்ள சஷாங் சாய், தேஷ்முக் சேகர் சஞ்சய், டாக்டர் தீப கணிகர், ஓம் பிரகாஷ் மீனா ஆகிய நேரடி ஐ.பி.எஸ். அதிகாரிகளும், மற்றும் எஸ்பிக்கள் மணிவண்ணன், அருளரசு, மகேஸ்வரன், சரவணன், டாக்டர் சாமிநாதன், ராஜசேகரன், ஜெயலட்சுமி, சிவகுமார், ஈஸ்வரன் உள்ளிட்ட 17 எஸ்.பி.க்கள் டி.ஐ.ஜி.க்களாகவும் பதவி உயர்வு பெறுகின்றனர்.

தமிழக காவல்துறை வரலாற்றில் 17 எஸ்.பி.க்களுக்கு டி.ஐ.ஜி. அந்தஸ்து கிடைப்பது இதுவே முதல் முறையாகும். பல மாதங்களாக காலியாக உள்ள நெல்லை, சேலம் டி ஐ ஜி பதவிகள் ஜனவரி மாதம் நிரப்பப்படும் என தெரிகிறது. மேலும் மத்திய அரசு பணியில் உள்ள எஸ்பி கண்ணாம்பாள், மதுவிலக்கு அமலாக்க பிரிவு எஸ்.பி. சாம்சன் உள்ளிட்ட சில அதிகாரிகள் சீனியர் எஸ்.பி. அந்தஸ்து பெறுகின்றனர். கோப்புகள் உள்துறை மூலம் டில்லிக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில் 2026 ஜனவரி 1 ஆம் தேதி புத்தாண்டு பரிசாக இந்த பதவி உயர்வு லிஸ்ட வெளியாக உள்ளதாக டிஜிபி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் தமிழக பொறுப்பு டிஜிபியாக பதவிவகிக்கும் வெங்கட்ராமன் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக தமிழக டிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *