செய்திகள் போஸ்டர் செய்தி

பதட்டமோ, கவலையோ இல்லாமல் வடகொரியா ஏவுகணை சோதனை

Spread the love

உயிர்க்கொல்லி கொரோனாவைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வரும் வேளையில்…

பதட்டமோ, கவலையோ இல்லாமல் வடகொரியா ஏவுகணை சோதனை

தென்கொரியா அதிர்ச்சி, கண்டனம்

 

சியோல், மார்ச் 29–

உலக நாடுகள் உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயைக் கட்டுப்படுத்த முடியாமல் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், வடகொரியாவோ எந்தவிதமான பதற்றமும் இல்லாமல் முன்னெப்போதையும் விட அதிக ஏவுகணைகளை சோதனை செய்து வருகிறது.

தீவிர கம்யூனிஸ்ட் நாடான வடகொரியாவுக்கு அண்டை நாடான தென் கொரியாவில் கொரோனா வைரசுக்கு இதுவரை 152 பேர் பலியாகியுள்ளனர். 9,583 பேர் பாதி்க்கப்பட்டுள்ளனர். மற்றொரு அண்டை நாடான ஜப்பானில் 52 பேர் இதே நோய்க்கு உயிரிழந்தனர். 1,693 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், இதுவரை வடகொரியாவில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டதா, உயிர் பலி என்ன என்பது குறித்து எந்தத் தகவலும் இல்லை. வடகொரிய அரசும் இதுவரை இந்நோய் குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை. கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய உடனேயே தனது எல்லைகள் அனைத்தையும் வடகொரியா மூடுவதாக அறிவித்தது.

உலக நாடுகள் கொரோனாவுக்கு எதிராக கடுமையான போர் நடத்திக் கொண்டு வரும் நெருக்கடியான சூழலில் எந்தவிதமான பதற்றமும் இன்றி வடகொரியா இன்று ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.

கடலோர வொன்சன் பகுதியில் இருந்து இரண்டு “குறுகிய தூர ஏவுகணைகள்” ஏவப்பட்டன, இவை 230 கிலோமீட்டர் (143 மைல்) அதிகபட்சமாக 30 கிலோமீட்டர் (19 மைல்) உயரத்தில் பறந்தன என்று தென் கொரியாவின் கூட்டுத் தளபதிகள் தெரிவித்துள்ளனர்.

வட கொரியாவின் இத்தகைய ராணுவ நடவடிக்கை மிகவும் பொருத்தமற்றது, உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று நாங்கள் கேட்டு கொள்கிறோம் என்று தென் கொரியா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது என யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது. வடகொரியாவின் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறது.

ஜப்பான் அறிக்கை

ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்தி அறிக்கையில், “வடகொரியா இன்று குறுகிய தொலைவு சென்று தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட ஏவுகணைகளை இன்று பரிசோதனை செய்தது. ஆனால், அந்த ஏவுகணை ஜப்பான் எல்லைக்குள் வரவில்லை. இந்த மாதத்தில் வடகொரியா பரிசோதனை செய்யும் 9-வது ஏவுகணை இதுவாகும். வடகொரிய அரசு தொடர்ந்து ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இவை அனைத்தையும் அதிபர் கிம் ஜான் உன் உன்னிப்பாக கவனித்து வருகிறார்” எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த மாதம் நான்கு சுற்று சோதனைகளில் ஏவப்பட்ட எட்டாவது மற்றும் ஒன்பதாவது ஏவுகணைகளாக இவைகள் உள்ளன. ஏனெனில் வட கொரிய படைகள் தொடர்ந்து இராணுவ பயிற்சிகளை மேற்கொள்கின்றன, பொதுவாக தலைவர் கிம் ஜாங் உன் தனிப்பட்ட முறையில் இதனை மேற்பார்வையிட்டு வருகிறார்.

இதற்கிடையில் இந்த ‘கொரோனா’ வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் விதத்தில் போர்க்கால நடவடிக்கையில் இறங்கி இருப்பதால்… தென்கொரியாவும் அமெரிக்காவும் கூட்டு ராணுவ நடவடிக்கைகளை ஒத்தி வைத்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *