வர்த்தகம்

பணக்காரர் பட்டியலில் மேக்ரோடெக் டெவலப்பர் நிறுவனத்தின் எம்.பி.லோதா தொடர்ந்து 4வது ஆண்டாக முதலிடம்

சென்னை, மார்ச் 27

க்ரோ ஹர்ன் இந்தியா நிறுவனம், 2020ம் ஆண்டுக்கான ரியல் எஸ்டேட் துறை பணக்காரர்கள் பட்டியலின் 4வது பதிப்பை வெளியிட்டுள்ளது. 2020 டிசம்பர் 31, நிலவரப்படி, 71 நிறுவனங்கள் மற்றும் 15 நகரங்களைச் சேர்ந்த 100 நபர்களின் சொத்து மதிப்பை கொண்டு க்ரோ ஹர்ன் இந்தியா நிறுவனம் இந்த பட்டியலை தயாரித்துள்ளது.

இந்த பட்டியலில் மேக்ரோடெக் டெவலப்பர் நிறுவனத்தின் எம் பி லோதா, தொடர்ச்சியாக 4வது ஆண்டாக முதலிடத்தில் உள்ளார், இவரை தொடர்ந்து டி.எல்.எஃப் நிறுவனத்தின் ராஜீவ் சிங் மற்றும் கே ரஹேஜாவின் சந்த்ரு ரஹேஜா முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களிலும், அமெரிக்க பில்லியனர்கள் 8 பேர் மற்றும் 27 புதியவர்களும், மும்பையை சேர்ந்த 31 நபர்களும், டெல்லியில் 22 நபர்களும் மற்றும் பெங்களூருவில் 20 நபர்களும் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

பட்டியலில் முதல் 100 நபர்களின் மொத்த சொத்து மதிப்பு 2 ஆண்டுகளுக்குப் பிறகு 26 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ. 3,48,660 கோடியாக உள்ளது. சத்வா டெவலப்பர்களின் பிஜய் குமார் அகர்வால் 2020 பட்டியலில் விரைவான வளர்ச்சியை பெற்றுள்ளார்.

பட்டியலில் ரூ.280 கோடி சொத்துடன் மிகவும் இளையவராக 36 வயதான சந்தக் குழுமத்தைச் சேர்ந்த ஆதித்யா சந்தக், ஈஸ்ட் இந்தியா ஹோட்டல்ஸ் நிறுவனத்தை சேர்ந்த 91 வயதான பி.ஆர்.எஸ். ஓபராய் மூத்த நபராகவும் உள்ளனர்.

இந்த அறிக்கையை வெளியிட்டுள்ள இந்தியாவுக்கான லிக்ஸில் தலைவர் பாபி ஜோசப் கூறுகையில், “இந்திய ரியல் எஸ்டேட் பணக்கார பட்டியல் உலகில் உள்ள செல்வந்தர்களின் பட்டியலை விட அதிகம், இது தொழில்துறையின் ஒட்டுமொத்த உணர்வு மற்றும் வளர்ச்சி பாதையை நமக்கு அடையாளம் காட்டுகிறது. இந்தத் துறையில் சொத்து மதிப்பின் வளர்ச்சி தொடர்ந்து வலுவாக இருப்பதையும், இந்த தொற்றுநோய் காலகட்ட ஆண்டில், பட்டியலில் புதியவர்கள் கூட இருப்பதையும் காணும்போது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது’’ என்று கூறினார்.

ஹர்ன் இந்தியா எம்.டி. மற்றும் தலைமை ஆராய்ச்சியாளரான அனஸ் ரஹ்மான் ஜுனைத் கூறுகையில், ‘‘கோவிட் 19 என்பது இந்திய ரியல் எஸ்டேட் துறைக்கு கடுமையான காலக்கட்டம்.

ஒவ்வொரு நகரத்திலும் உள்ள கட்டுமான நிறுவனங்கள் தங்கள் சந்தை மதிப்பை எப்போதும் பலப்படுத்தியே வருகிறது. க்ரோ ஹர்ன் இந்தியா ரியல் எஸ்டேட் துறை பணக்காரர்கள் பட்டியல் 27 சதவீத வளர்ச்சியை குறிப்பிட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது’’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *