செய்திகள்

பணகுடி அருகே தோட்டத்தில் புகுந்து 10 ஆடுகளை கடித்து கொன்ற சிறுத்தை

Makkal Kural Official

திருநெல்வேலி, ஜூலை 29–

பணகுடி அருகே தோட்டத்தில் புகுந்த சிறுத்தை 10 ஆடுகளை கடித்து கொன்ற சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் பணகுடி அடுத்த ரோஸ்மியா புரத்தை சேர்ந்தவர் அரிராம். இவருக்கு சொந்தமான தோட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது. இதில் விவசாயம் பார்த்து வருவதோடு 30-க்கும் மேற்பட்ட வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார்.இந்நிலையில் நேற்று இரவு அவரது தோட்டத்தில் தனது ஆடுகளை அடைத்து விட்டு வீட்டிற்கு தூங்க சென்றார்.

இன்று வழக்கம் போல அதிகாலையில் தோட்டத்திற்கு அரிராம் சென்றார். சிறுத்தை புலி கால் தடம் அப்போது தோட்டத்தில் இருந்தது. சுமார் 10-க்கும் மேற்பட்ட ஆடுகளை சிறுத்தை புலி கடித்து குதறிய நிலையில் இறந்து கிடந்தது. மேலும் 2 ஆடுகளை அது தூக்கி சென்றதும் தெரியவந்தது.

இவரது தோட்டத்தில் சிறுத்தை புலியின் கால்தடம் இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இது தொடர்பாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். ஆனால் வெகுநேரமாகியும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வரவில்லை என அரிராம் புகார் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *