சினிமா செய்திகள்

பட அதிபர்களை ஒன்றிணைத்து ரூ. 2 கோடியில் படம் : ஆர்.பி.சவுத்ரி ஏற்பாடு

* ஒரு பங்கின் விலை ரூ.1 லட்சம் 

* அதிகபட்சம் –200 பங்குகள்.

பட அதிபர்களை ஒன்றிணைத்து ரூ. 2 கோடியில் படம் :

ஆர்.பி.சவுத்ரி ஏற்பாடு

கோவை வினியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியத்தோடு புதிய முயற்சி

 

சென்னை, மே. 23–

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பில் புதிய சகாப்தம் படைக்கும் முயற்சியில் கோவை பிரபல வினியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியமும், பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்தரியும் இணைந்து இருக்கிறார்கள்.

இயக்குநர் மற்றும் நடிகர்களும் பங்குதாரர்களாக உருவாகப்போகும் புதிய தமிழ்த் திரைப்படம் இது.

தயாரிப்புச் செலவு ரூ. 2 கோடி. அந்த ரூ. 2 கோடி ரூபாயும் பல சினிமா சார்ந்த நபர்களின் ஷேர்களோடு கூடிய பங்களிப்போடு உருவாகப் போகிறது.

இம் முயற்சியில் ஒருங்கிணைப்பு: பட அதிபர் பிரமிட் நடராஜன்.

கதை: வெங்கட் சுபா, இயக்குநர்: கே.எஸ்.ரவிக்குமார்,

நடிகர்கள்: சத்யராஜ், விஜய் சேதுபதி, பார்த்திபன். சூப்பர் குட் பிலிம்ஸ், சக்தி பிலிம்ஸ், பிரமிட் நடராஜன், கேபி பிலிம்ஸ் பாலு, எல் எம் எம் முரளி, காளையப்பன், திருச்சி ரவி சாந்தி பிலிம்ஸ், திருநெல்வேலி மணிகண்டன், தயாரிப்பாளர் விஜயகுமார், ஊட்டி முருகன், ராக்லைன் வெங்கடேஷ், டி எம் சி இளங்கோ சேலம்,

ஏ ஒன் டாக்டர், ராம்நாடு ரவிச் சந்திரன் தயாரிப்பாளர் – செல்வகுமார் மற்றும் நண்பர்கள் தலா 10 பங்குகளை வாங்குகிறார்கள்.

தயாரிப்பாளர் கே. ராஜன், திருநெல்வேலி ராம் முத்துராம் லீஸ் பார்ட்டி, 2 தஞ்சாவூர் முத்தலிப், அகட விகடம் பாஸ்கர் ராஜ், திருமணம் படத்தயாரிப்பாளர், பாண்டிச்சேரி சுந்தர் விநியோகஸ்தர், தனஞ்ஜெயன், நடிகர் உதயா குடும்பம், முருகராஜ். தயாரிப்பாளர்: நடிகை சத்யபிரியா ஆகியோர் தலா 5 பங்குகளை வாங்குகிறார்கள். ஆக மொத்தம் – 200 பங்குகள். தவிர தலா 1 பங்கை வாங்குவதற்கு 26 பேர் முன் வந்திருக்கிறார்களாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *