போஸ்டர் செய்தி

பட்டா கத்தியுடன் பஸ்சில் பயணம் செய்த மாணவர்கள்

சென்னை,ஆக.30–

சென்னை மாநகர பஸ்சில் கல்லூரி மாணவர்கள் பட்டா கத்தியுடன் பயணம் செய்ததது தொடர்பாக ஒரு மாணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

பிராட்வே நோக்கி சென்ற பஸ்சில், பயணித்த அவர்கள் கத்திகளை சுழற்றியும், ஓடும் பஸ்சில் தரையில் கத்தியை தீட்டியபடியும் பயணித்தனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர். அண்ணாசதுக்கம் போலீசார் மாநில கல்லூரி முதல்வரிடம் புகார் செய்துள்ளனர்.இந்தநிலையில் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், பஸ்சில் பட்டாகத்தியுடன் சென்ற மாநில கல்லூரியை சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவன் ஆனந்தராஜ் என்பவனை கைது செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *