திருவள்ளூர், செப். 20
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வட்டத்திற்குட்பட்ட பட்டாபிராமில் மாவட்ட கலெக்டர் டாக்டர். த.பிரபு சங்கர் ரூ.235 கோடி செலவில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்கான பணியினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை மாநகரத்தின் குறிப்பாக வடமேற்கு பகுதியின் வளர்ச்சிக்கு அடிப்படை வசதிகளின் தேவை வளர்ந்து வருவதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு ரசாணை வெளியிட்டு திருவள்ளூர் மாவட்டம் ஆவடி வட்டம் பட்டாபிராமில் உள்ள 38.40 ஏக்கர் நிலத்தில் துவங்குவதற்கு திட்டமிடப்பட்டது அதன் அடிப்படையில் முதற்கட்டமாக 10 ஏக்கரில் அதாவது 5.57 இலட்சம் சதுர அடி பரப்புகளில் ரூ. 235 கோடி செலவில் ஒரு தகவல் தொழில்நுட்ப பூங்கா ஒன்றினை நிறுவிட ஒப்புதல் வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
இத் திட்டத்தின் முதல் பகுதி 21 மாடிகளை கொண்டதாக இருக்கும் இத்திட்டம் டைடல் நிறுவனத்தின் சொந்த நிதியிலிருந்து நிதி நிறுவனங்களிடம் இருந்து பெறப்படும் கடன் தொகை மூலமும் நிறைவேற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இத்திட்டப் பணிகளை நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது என்னவென்று அலுவலர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டு இப்பணியினை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அலுவலர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வில் ஆவடி மாநகராட்சி ஆணையர் ச.கந்தசாமி, திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் ஆ.கற்பகம், ஆவடி வட்டாட்சியர் சசிகலா மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.