செய்திகள்

பட்டர்பிளை, எல்டியா தேங்காய் எண்ணெய் இணைந்து சென்னை சூப்பர் அம்மா தேர்வு போட்டி; மனநல ஆலோசனை போட்டிக்கும் ஏற்பாடு

சென்னை, மே 16–
சென்னை வேளச்சேரியில் `சூப்பர் அம்மா 2019′ போட்டியை எல்டியா தேங்காய் எண்ணெய் மற்றும் பட்டர்பிளை அப்ளையன்சஸ் ஆகியவை இணைந்து இந்நிகழ்ச்சியை நடத்தியது. இந்தப் போட்டி அவர்களின் தனித்துவமிக்க செயல்திறன் மற்றும் திறமையை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருந்தது.
இதில் 200க்கும் மேற்பட்ட தாய்மார்கள் பங்கேற்றனர். இதில் அவர்களின் குழந்தைகளின் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று முதலிடம் பிடித்த மேரி அமுதாவுக்கு 2வது பரிசு, ஆர்த்தி, ப்ரீத்திக்கும் 3வது பரிசு வழங்கப்பட்டது. `சென்னை சூப்பர் அம்மா’ பட்டம் வழங்கப்பட்டது.
தாய்மார்களின் மனநலன் குறித்த போட்டியை மைன்ட் கபே டாக்டர் சாந்தி நடத்தினார். மாலையில் குடும்பத்தினரை மகிழ்விக்கும் விதமாக கேளிக்கை நிகழ்ச்சிகள், நடனம், விளையாட்டு ஆகியவை நடைபெற்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *